இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து குழாத்தின் தலைவராக டொம் லேத்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்காக பயணிக்கவுள்ளதால், அணியின் தலைவர் பொறுப்பு டொம் லேத்தமிற்கு வழங்கப்பட்டுள்ளது.
>> கேன் வில்லியம்சனின் அபார சதத்தோடு நியூசிலாந்து வெற்றி
கேன் வில்லியம்சனுடன் மிச்சல் சென்ட்னர், டிம் சௌதி மற்றும் டெவோன் கொன்வே ஆகியோரும் IPL தொடரில் விளையாடவுள்ளதால், ஒருநாள் தொடருக்கான குழாத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குறித்த மூவரும் முழுமையான தொடரிலும் விளையாட மாட்டார்கள் என்பதுடன் பின் எலன், கிளேன் பிலிப்ஸ் மற்றும் லொக்கி பேர்கஸன் ஆகியோர் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய பின்னர் IPL தொடரில் இணைந்துக்கொள்ளவுள்ளனர்.
முதல் போட்டிக்கு மாத்திரம் தெரிவுசெய்யப்பட்டுள்ள இந்த வீரர்களுக்கு பதிலாக மார்க் செப்மன், ஹென்ரி நிக்கோல்ஸ் மற்றும் புதுமுக வீரர் பென் லிஸ்டர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
பென் லிஸ்டருடன் புதுமுக வீரர் சாட் போவ்ஸ் அணிக்குள் முதன்முறையாக அழைக்கப்பட்டுள்ளதுடன், டொம் பிளண்டல் மற்றும் வில் யங் ஆகியோரும் ஒருநாள் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இம்மாதம் 25, 28 மற்றும் 31ம் திகதிகளில் முறையே ஆக்லேண்ட், கிரிஸ்ட்சேர்ச் மற்றும் ஹெமில்டன் போன்ற மைதானங்களில் நடைபெறவுள்ளது.
ஒருநாள் குழாம்
டொம் லேத்தம் (தலைவர்), பின் எலன், டொம் பிளண்டல், சாட் போவ்ஸ், மைக்கல் பிரேஸ்வல், மார்க் செப்மன், லொக்கி பேர்கஸன், மெட் ஹென்ரி, பென் லிஸ்டர், டெரைல் மிச்சல், ஹென்ரி நிக்கோல்ஸ், கிளேன் பிலிப்ஸ், ஹென்ரி சிப்லி, இஷ் சோதி, பிளைர் டிக்னர், வில் யங்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<