பாராலிம்பிக் குண்டு எறிதலில் பாலித்தவுக்கு ஏமாற்றம்

2020 Tokyo Paralympics

270

டோக்கியோ பாராலிம்பிக் ஆண்களுக்கான குண்டு எறிதல் F63 பிரிவு இறுதிப் போட்டியில் இலங்கையின் பாலித்த பண்டார ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் விளையாட்டு விழா நடைபெற்று வருகின்றனஇதன் 11ஆவது நாளான இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான F63 பிரிவு குண்டு எறிதல் போட்டியில் இலங்கையின் 9ஆவதும், கடைசியுமான வீரர் பாலித்த பண்டார பங்குபற்றினார்.

பாராலிம்பிக்கில் இலங்கை வீரர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்

தனது முதல் பாராலிம்பிக்கில் போட்டியிட்ட அவர், 13.40 மீட்டர் தூரம் எறிந்து ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் முயற்சியில் 12.67 மீட்டரையும், இரண்டாவது முயற்சியில் 13.08 மீட்டரையும், மூன்றாவது முயற்சியில் 13.30 மீட்டரையும் அவர் பதிவுசெய்தார்.

இறுதியாக மேற்கொண்ட மூன்று முயற்சிகளிலும் முறையே 13.40 மீட்டர், 13.30 மீட்டர், 12.26 மீட்டர் என்ற தூரங்களைப் பதிவுசய்த அவர், ஒன்பது வீர்ரகள் பங்குகொண்ட இப்போட்டியில் 5ஆவது இடம்பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

இப்போட்டியில் ரியோ 2016 பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் பாராலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற பிரித்தானியாவின் அலெட் டேவிஸ், 15.33 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

பாராலிம்பிக் 100 மீட்டரில் குமுது பிரியங்காவுக்கு தோல்வி

ஈரான் வீரர் சஜாத் மொஹம்மதியன் (14.88 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தையும், குவைத் வீரர் பைஸால் சொரூர் (14.13 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதன்படி, இம்முறை டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் 9 வீரர்கள் பங்குபற்றியிருந்ததுடன், ஆவர்களில் தினேஷ் பிரியன்த மற்றும் சமித்த துலான் ஆகிய இருவரும் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் முறையே தங்கம், வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

எனவே, டோக்கியோ பாராலிம்பிக்கின் 11ஆவது நாள் நிகழ்ச்சிகள் இன்று நிறைவடையும் போது இலங்கை அணி, ஒரு தங்கம், ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 57ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்மை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…