பாராலிம்பிக் 100 மீட்டரில் குமுது பிரியங்காவுக்கு தோல்வி

2020 Tokyo Paralympics

316

டோக்கியோ பாராலிம்பிக்கில் பெண்களுக்கான T47 பிரிவு 100 மீட்டர் தகுதிகாண் சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை குமுது பிரியங்கா எட்டாவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

டோக்கியோ பாராலிம்பிக்கின் ஏழாவது நாளான இன்று (31) காலை பெண்களுக்கான T47 பிரிவு 100 மீட்டர் தகுதிகாண் போட்டிகள் நடைபெற்றதுஇதில் இம்முறை டோக்கியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு வீராங்கனையான குமுது பிரியங்கா களமிறங்கினார்.

குமுது பிரியங்கா பங்குகொண்ட முதலாவது தகுதிகாண் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா, வெனிசுவேலா, தென்னாபிரிக்கா, சீனா, செக் குடியரசு, தாய்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியிட்டனர்

பாராலிம்பிக் செல்லும் ஒரே இலங்கை வீராங்கனை குமுது

எனினும், குறித்த போட்டியை 13.31 செக்கன்களில் நிறைவுசெய்த குமுது பிரியங்கா, எட்டாவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டார்

இதனிடையே, குமுது பிரியங்கா பங்குகொண்ட முதலாவது தகுதிகாண் போட்டியில் வெனிசுவோ நாட்டு வீராங்கனை லிஸ்பெலி வெரா போட்டியை 12.14 செக்கன்களில் ஓடிமுடித்து முதலிடத்தையும், அமெரிக்காவின் டேஜா யங் (12.26 செக்.) இரண்டாவது இடத்தையும், சீனாவின் லூ லி (12.80 செக்.) மூன்றாம் இடத்தையும் பெற்று நேரடியாக இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.

எவ்வாறாயினும், செப்டெம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள பெண்களுக்கான நீளம் பாய்தலில் குமுது பிரியங்கா போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Photos: Tokyo Paralympic Games 2020 – Day 4

>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<