டோக்கியோ ஒலிம்பிக் குழுவில் வேலை செய்த ஊழியருக்கும் கொரோனா

142
Tokyo Olympic

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழா அட்டவணைகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒலிம்பிக் குழு ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகம் முழுவதும் முடங்கிக் கிடக்கின்றது. அதிலும் கடந்த ஒன்றரை மாதங்களாக விளையாட்டு போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. பெரும்பாலான போட்டிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டன

இந்த நிலையில், உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி நடைபெறுவதாக இருந்தது

கொரோனா பீதியினால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோய்..

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவுசெய்யப்பட்டு உரிய தினத்தில் போட்டிகளை நடத்த ஜப்பான் தயாராக இருந்தது

இதனிடையே, அவுஸ்திரேலியா, கனடா உட்பட பல்வேறு நாடுகளின் ஒலிம்பிக் சங்கங்கள் கொரோனா பீதிக்கு இடையில் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்தன. கூடவே கொரோனா பாதிப்பில் இருந்து ஜப்பானும் தப்பவில்லை

எனவே, ஜப்பான் வேறுவழியின்றி ஒலிம்பிக் விழாவை எதிர்வரும் 2021 ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தது. இதனால், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விழாவுக்கான அட்டவணைகள் தயாரிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது

ஜப்பானில் ஊரடங்கு நிலவுவதால் டோக்கியோ ஒலிம்பிக் குழு ஊழியர்கள் 3,800 பேர் வீட்டிலிருந்தபடி வேலை செய்கின்றனர். அவற்றை ஒருங்கிணைக்கும் பணியை ஒலிம்பிக் குழுவின் தலைமை அலுவலகத்தில் இருந்து சிலர் மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் சுமோ வீரர்

ஜப்பானின் பாரம்பரிய விளையாட்டான சுமோ மல்யுத்த விளையாட்டு வீரர் ஒருவருக்கு..

இந்த நிலையில், குறித்த ஊழியர்களில் 30 வயதுடைய ஆண் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (22) உறுதி செய்யப்பட்டது

இதுதொடர்பில் அந்நாட்டு ஒலிம்பிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது

அத்துடன், குறித்த நபர் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் விழாவை நடத்துவதில் முன்பு தீவிரமாக இருந்த ஜப்பான் ஒலிம்பிக் குழு நிர்வாகிகளுக்கு இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதேவேளை, ஜப்பானில் இதுவரை சுமார் 12,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 276 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<