களுத்துறை அணிக்காக இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்ற அகீல் இன்ஹாம்

218

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் பிரிவு B (Tier B) கழகங்கள் இடையே நடைபெறும் மூன்று நாட்கள் கொண்ட ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (11) நான்கு போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

களுத்துறை நகர கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

கொழும்பில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த இப்போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய களுத்துறை நகர கழக அணி, அகீல் இன்ஹாம் (165), சசிந்த ஜயத்திலக்க (140) ஆகியோர் பெற்றுக் கொண்ட அபார சதங்களுடன்  முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 406 ஓட்டங்களை பெற்றவாறு ஆட்டத்தை இடை நிறுத்தியது.

எனினும், ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழக அணியினர் தமது முதல் இன்னிங்ஸில் 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

பாகிஸ்தான் இளையோர் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியை நிராகரித்த யூனிஸ் கான்

19 வயதுக்கு உட்பட்ட பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பை அந்நாட்டு…

பின்னர் பெரிய முன்னிலை (198) ஒன்றுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பம் செய்த களுத்துறை நகர கழக அணி, அகீல் இன்ஹாம் மீண்டும் பெற்றுக் கொண்ட சதத்துடன் (103)  8 விக்கெட்டுக்களை இழந்து 318 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வேளை தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. ப்ளூம்பீல்ட் அணியின் பந்துவீச்சு சார்பில் கசுன் அபேரத்ன 6 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

களுத்துறை நகர கழகத்தின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 518 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைய இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய ப்ளூம்பீல்ட் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 116 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 406/9d (111) –  சசிந்த ஜயத்திலக்க 140, அகீல் இன்ஹாம் 165, அசந்த சிங்கபுலி 119/3

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 208 (64) – சனோஜ் தர்ஷிக்க 82*, பசிந்து மதுஷன் 76/5

களுத்துறை நகர கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 319/8d (61) – அகீல் இன்ஹாம் 103, கசுன் அபேரத்ன 37/6

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 116/1 (19) – கசுன் அபேரத்ன 54*

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.

Photos: Bloomfield C & AC vs Kalutara TC | SLC Major League 2018/19 – Tier “B”

பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்

பொலிஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியும் சமநிலை அடைந்தது. போட்டியில் முதலில் துடுப்பாடிய பாணந்துறை அணி, அசந்த பஸ்நாயக்கவின் சதத்தின் (106) உதவியோடு 294 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸில் குவித்துக் கொண்டது. அதேநேரம் பொலிஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக தினுக் ஹெட்டியாரச்சி மற்றும் மஞ்சுல ஜயவர்தன ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் 267 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸில் பெற்றது. பொலிஸ் அணி சார்பாக மஹேஷ் பிரியதர்ஷன சதம் (113) பெற, பாணந்துறை விளையாட்டு கழக பந்துவீச்சில் கெளமால் நாணயக்கார, சமீந்திர மதுஷான் மற்றும் அமித கெளசல்ய ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.

Photos: Police SC vs Panadura SC | SLC Major League 2018/19 – Tier “B”

பின்னர் சிறிய முன்னிலை (28) ஒன்றுடன் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த பாணந்துறை விளையாட்டு கழக அணி, 255 ஓட்டங்களுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸை நிறைவு செய்தது.

பாணந்துறை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் சார்பாக நிபுன தேஷான் 78 ஓட்டங்களை குவித்து அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்தார். இதேநேரம் பொலிஸ் அணியின் பந்துவீச்சில் மீண்டும் சிறப்பாக செயற்பட்ட மஞ்சுல ஜயவர்த்தன 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டி20 அணிகள், வீரர்களின் தரவரிசைகளில் எதிர்பாராத மாற்றங்கள்

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி முடிவின்…

பாணந்துறை அணியின் இரண்டாம் இன்னிங்ஸினை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 284 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. அதனை அடைய இரண்டாம் இன்னிங்ஸிஸ் துடுப்பாடிய பொலிஸ் விளையாட்டுக் கழகம், 11 ஓவர்கள் நிறைவில் 105 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்து போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 294 (100.2) – அசந்த பஸ்நாயக்க 106, திமிர ஜயசிங்க 65, மஞ்சுல ஜயவர்த்தன 59/4, தினுக் ஹெட்டியாரச்சி 88/4

பொலிஸ் விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 267 (77.1) – மஹேஷ் பிரியதர்ஷன 113, சமீந்திர மதுசன் 59/3, கெளமால் நாணயக்கார 94/3, அமித கெளசல்ய  84/3

பாணந்துறை விளையாட்டு கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 255 (87.1) – நிபுன தேஷன் 78, மஞ்சுல ஜயவர்த்தன 57/4

பொலிஸ் விளையாட்டு கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 105/3 (11) – அஜந்த மெண்டிஸ் 45

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்

வெலிசரையில்  ஆரம்பமாகிய லங்கன் கிரிக்கெட் கழகம் மற்றும் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் இடையிலான இப்போட்டியும் சமநிலை அடைந்தது.

இப்போட்டியில் இலங்கை கடற்படை அணியினரால் துடுப்பாட பணிக்கப்பட்ட லங்கன் கிரிக்கெட் கழக அணியினர் தமது முதல் இன்னிங்ஸில் 223 ஓட்டங்களை குவித்தனர். எனினும், இலங்கை கடற்படை அணி தமது முதல் இன்னிங்ஸில் 212 ஓட்டங்களையே பெற்றது.

பின்னர் முதல் இன்னிங்ஸில் 11 ஓட்டங்களால் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய லங்கன் கிரிக்கெட் கழகம் லஹிரு டில்ஷான் மற்றும் சிப்ரான் முத்தலிப் ஆகியோரின் திறமையான ஆட்டத்தினால் 347 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. லங்கன் கிரிக்கெட் கழகம் சார்பாக லஹிரு டில்ஷான் சதமொன்றுடன் 139 ஓட்டங்களை குவிக்க, சிப்ரான் முத்தலிப் 89 ஓட்டங்களை பெற்றிருந்தார். அதேநேரம் இலங்கை கடற்படை அணியின் பந்துவீச்சில் சவிந்து பீரிஸ் 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 359 ஓட்டங்களை அடைய பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் 224 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் போட்டியின் ஆட்டநேரம் முடிவடைந்து, போட்டி சமநிலை அடைந்தது.

வேகப் பந்துவீச்சில் மிரட்டி சாதித்துக் காட்டிய சமிந்த வாஸ்

உலகக் கிண்ண அரங்கில் தனது வேகப் பந்துவீச்சு மந்திரத்தால் எதிரணிகளை…

இம்முறை லங்கன் கிரிக்கெட் கழக பந்துவீச்சில் துலித் வெல்லால்கே மற்றும் சிப்ரான் முத்தலிப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 223 (57.4) – துசிர மதநாயக்க 72, HGK டில்ஷான் 70/4, சவிந்து பீரிஸ் 81/4

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 212 (60.1) – செவோன் பொன்சேக்கா 75, லக்ஷித மானசிங்க 44/4

லங்கன் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 347 (80.2) – லஹிரு டில்ஷான் 139, சிப்ரான் முத்தலிப் 89, சவிந்து பீரிஸ் 118/6

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 224/9 (71) – சலித பெர்னாந்து  48, சிப்ரான் முத்தலிப் 46/3, துலித் வெல்லால்கே 53/3

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.

காலி கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

குருநாகல் வெலகெதர மைதானத்தில் முடிந்த காலி கிரிக்கெட் கழகம் மற்றும் குருநாகல் கிரிக்கெட் கழகம் இடையிலான இப்போட்டியும் சமநிலை அடைந்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய குருநாகல் கிரிக்கெட் கழக அணியினர் தமது முதல் இன்னிங்ஸில் 343 ஓட்டங்களை குவித்துக் கொண்டனர். குருநாகல் அணியின் சார்பாக லஹிரு ஜயரத்ன 78 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களை பதிவு செய்ய, காலி அணியின் பந்துவீச்சில் அகலன்க கனேகம 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த காலி கிரிக்கெட் கழக அணி 290 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. காலி அணியில் சுதீர திலகரட்ன அரைச்சதம் (54) ஒன்றினை பெற்றுக் கொண்டார். அதேநேரம் குருநாகல் அணி பந்துவீச்சில் துஷித் டி சில்வா  4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Photos: Kurunegala Youth CC vs Galle CC | SLC Major League 2018/19 – Tier “B”

பின்னர் தமது இரண்டாம் இன்னிங்ஸில் குருநாகல் அணி 197 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து, போட்டியின் வெற்றி இலக்காக 251 ஓட்டங்களை நிர்ணயம் செய்தது.

இந்த வெற்றி இலக்கினை அடைய இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய காலி கிரிக்கெட் கழகம், தமது இரண்டாம் இன்னிங்ஸில் 192 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது, போட்டியின் ஆட்டநேரம் நிறைவுக்கு வந்து போட்டி சமநிலை அடைந்தது. குருநாகல் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட ரசஞ்சன ஜயரத்ன 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்துக்கு முன் மாலிங்கவுக்கு ஓய்வு

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை…

போட்டியின் சுருக்கம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 343 (101.3) – லஹிரு ஜயரத்ன 78, அகலன்க கனேகம 86/5

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 290 (59.5) – சுதீர திலகரட்ன 54, துஷித் டி சில்வா 67/4

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 197 (56.4) – கேஷான் வன்னியாரச்சி 37*, ஹஸ்னைன் பொகாரி 92/4

காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 192/9 (43) – நிசால் ரன்திக்க  52, ரசஞ்சய ஜயரத்ன 61/4

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<