இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடையிலான ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான டிக்கட் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு அடுத்த மாத ஆரம்பத்தில் சுற்றுலா மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி இங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் ஆடவிருக்கின்றது.
இந்த ஒருநாள் மற்றும் T20I தொடர்களின் போட்டிகள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் தொடரின் டிக்கெட் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, T20I தொடர் ஜனவரி 14ஆம் திகதி தொடங்குகின்றது.
வெளியிடப்பட்ட தகவல்களுக்கு அமைய தொடரின் டிக்கட்டுக்களை தற்போது இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ இணையதளம் வாயிலாகவும் (www.srilankacricket.lk), கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் டிக்கட் காரியலம் அமைந்துள்ள வித்தியா மாவத்தை கொழும்பு என்னும் முகவரியிலும் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிக்கட்டுக்களின் ஆரம்ப விலையாக ரூபா. 200 உம், அதிகபட்ச விலையாக ரூபா. 5000 உம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
டிக்கட் விலை விபரம்
>>மேலும் கிரிக்கட் செய்திகளைப் படிக்க<<