கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள மிகுதி உள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பிலான அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று வியாழக்கிழமை (15) முதல் அடுத்துவரும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை பல்வேறு இடங்களில் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
>> பாகிஸ்தான் தொடருக்கான நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு
அதேநேரம் கொழும்பில் நடைபெறவுள்ள LPL போட்டிகளுக்கான டிக்கெட்டுகளின் விலைகளையும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
LPL போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானம், டராஷ் நிறுவனத்தின் தலைமையகம், சினமன் கார்டன் ஹோட்டல் (அறை இல 168) ஆகிய இடங்களில் காலை 10 மணிமுதல் மாலை 06 மணிவரை பெற்றுக்கொள்ள முடியும்.
குறிப்பிட்ட இந்த இடங்களை தவிர்த்து கொட்டிகாவத்த, பொரளை, வத்தளை, பேலியாகொடை, தெஹிவளை, கொட்டாவ, கொழும்பு 5, பிலியந்தலை மற்றும் களனி போன்ற இடங்களில் அமைந்துள்ள டராஷ் மையங்களில் டிக்கெட்டுகளை காலை 10 மணிமுதல் மாலை 06 மணிவரை பெற்றுக்கொள்ள முடியும்.
மேற்குறிப்பிட்ட இடங்களில் அனைத்து தினங்களும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் போட்டிகள் இல்லாத தினங்களில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளமுடியும். அதுமாத்திரமின்றி டராஷ் நிறுவனத்தின் இணையத்தளத்திலும் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யமுடியும்.
டிக்கெட்டுகளின் விலைகளை பொருத்தவரை லீக் போட்டிகள் மற்றும் நொக்-அவுட் போட்டிகளுக்கென தனித்தனியான விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் லீக் போட்டிகளுக்கு டிக்கெட்டுகள் 300 ரூபா முதல் 800, 1200, 1750, 3000 மற்றும் 5000 ரூபாவரை விற்பனை செய்யப்படவுள்ளன. நொக்-அவுட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் 400 ரூபா முதல் 1000, 1500, 2000, 3500 மற்றும் 6000 ரூபாவரை விற்பனை செய்யப்படவுள்ளன.
LPL தொடரின் மிகுதி உள்ள போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை (15) முதல் 23ம் திகதிவரை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<