பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறிய ஜப்னா, தம்புள்ள மற்றும் கோல்!

Lanka Premier League 2021

747

லங்கா பிரீமியர் லீக்கின்(LPL) பிளே-ஓஃப் சுற்றுக்கு ஜப்னா கிங்ஸ், தம்புள்ள ஜயண்ட்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன.

தொடரின் நேற்றைய (15) போட்டியில் தம்புள்ள ஜயண்ட்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இந்த போட்டியில், கோல் கிளேடியேட்டர்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டு அணிகளும் தலா 7 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

>>லங்கா பிரீமியர் லீக் தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு மூன்றாவது வெற்றி

எனவே, தொடரின் முதல் சுற்றில் மேலும் நான்கு போட்டிகள் மாத்திரமே எஞ்சியிருக்கும் நிலையில், 10 புள்ளிகளுடன் இருக்கும் ஜப்னா கிங்ஸ், 7 புள்ளிகளை பெற்றுள்ள தம்புள்ள ஜயண்ட்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகள் பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்தநிலையில், பிளே-ஓஃப் சுற்றின் வாய்ப்பை பெறும் போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கண்டி வொரியர்ஸ் ஆகிய அணிகள் உள்ளன. இதில், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளதுடன், கண்டி வொரியர்ஸ் அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளை பெற்றுள்ளது.

மேற்குறித்த இரண்டு அணிகளுக்கும் தலா இரண்டு போட்டிகள் உள்ளன. இதில், கொழும்பு அணி அடுத்த போட்டியில் வெற்றிபெற்றால், கொழும்பு ஸ்டார்ஸ் அணியினர் அரையிறுதிக்கு தகுதிபெறமுடியும். எனினும், கண்டி வொரியர்ஸ் அணி, அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெறவேண்டும் என்பதுடன், கொழும்பு அணி தங்களுடைய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடையவேண்டும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<