பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா 

305
Courtsey - AFP

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களான ஹரிஸ் ரவூப், சதாப் கான் மற்றும் ஹைதர் அலி ஆகிய மூன்று பேருக்கும் கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வீரர்களுக்கு லாகூரில் கொரோனா பரிசோதனை

இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள…

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) கடந்த வாரம் தமது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 29 பேர் கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் குழாத்தினை அறிவித்திருந்தது. இந்த பாகிஸ்தான் குழாம் இங்கிலாந்து சென்று மூன்று டெஸ்ட், மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடும் எனக் கூறப்பட்டிருந்ததோடு, இளம் வீரர்கள் பலரும் இதற்கான பாகிஸ்தான் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த பாகிஸ்தான் வீரர்கள் குழாம் இங்கிலாந்து செல்ல முன்னர் ஞாயிற்றுக்கிழமை (21) ராவல்பின்டி நகரில் வைத்து மருத்துவ பரிசோதனைகளுக்கு முகம் கொடுத்திருந்தது. 

இந்த பரிசோதனைகளின் போதே ஹரிஸ் ரவூப், சதாப் கான், ஹைதர் அலி ஆகிய வீரர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதேநேரம், தொற்று உறுதி செய்யப்பட்ட வீரர்கள் உடனடியாக சுயதனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்பட்டதோடு அவர்களுக்கான ஏனைய மருத்துவ வசதிகள், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் மருத்துவ அதிகாரிகள் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, ராவல்பிண்டி நகரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இமாத் வஸீம், உஸ்மான் சின்வாரி ஆகியோருக்கு வைரஸ் தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து இவ்வீரர்கள் தற்போது லாஹூர் நகருக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

என்னை சிறு பையன் என நினைக்க வேண்டாம்: நசீம் ஷா

இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெறவுள்ள தொடரில் தன்னை சிறு பையனாக நினைத்தால் அது அந்த அணிக்கு…

மறுமுனையில், பாகிஸ்தான் குழாத்திற்குள் அடங்கும் ஏனைய வீரர்களும், அணியின் முகாமைத்துவக் குழுவும் திங்கட்கிழமை (22) கராச்சி நகரில் வைத்து பரிசோதனைகளுக்கு முகம்கொடுத்திருப்பதோடு, இந்த வீரர்களின் உடல்நிலை தொடர்பான முடிவுகள் செவ்வாய்க்கிழமை (22) அல்லது புதன்கிழமை (23) வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதேவேளை, நோய்த் தொற்று ஏற்பட்ட வீரர்கள் தொடர்பான மேலதிக விபரங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பின்னர் உறுதி செய்யும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

 மேலும்  பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க