இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவருகின்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிக் கட்டம் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இன்று (08) ஆரம்பமாகியது.
12, 13, 14 மற்றும் 15 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக 2000 இற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் பங்குபற்றலுடன் நடைபெற்ற இம்முறை ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளில் 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் மற்றும் 13 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 80 மீற்றர் சட்டவேலி ஓட்டம் ஆகிய போட்டிகளில் 3 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
பெண்களுக்கான தட்டெறிதலில் புதிய சாதனை
இதில் 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொண்ட கந்தானை செபஸ்டியன்ஸ் மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹேஷானி மஹேஷிகா, 35.46 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப்பதக்கம் வென்றதுடன், புதிய போட்டி சாதனையும் நிகழ்த்தினார்.
முன்னதாக 2014ஆம் ஆண்டு கொழும்பு விசாகா கல்லூரியைச் சேர்ந்த சனுகா அட்டபத்து, 31.57 மீற்றர் தூரத்தை எறிந்து நிலைநாட்டிய சாதனையை சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு ஹேஷானி மஹேஷிகா முறியடித்தார்.
இந்நிலையில், இரத்தினபுரி சுமனா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஐ. ஹப்புஆரச்சி, 26.91 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும், கல்கமுவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த பி அபேகோன், 23.75 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
23 வருட சாதனை முறியடிப்பு
48 வருடகால சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் வரலாற்றில் சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு 13 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ருவன்சா வீரக்கொடி புதிய போட்டி சாதனை படைத்தார்
>>சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் யாழ் ஹார்ட்லிக்கு முதல் பதக்கம்<<
குறித்த போட்டியில் 4.88 மீற்றர் தூரம் பாய்ந்து அவர் இந்த புதிய மைல்கல்லை எட்டினார்.
முன்னதாக 1994ஆம் ஆண்டு மாத்தறை சுஜாதா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த யசாரா நுதிதானி சில்வா, 4.83 மீற்றர் தூரம் பாய்ந்து நிலைநாட்டிய சாதனையை சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு ருவன்சா வீரக்கொடி முறியடித்தார்.
இந்நிலையில், 4.75 மீற்றர் தூரம் பாய்ந்து திக்வெல்ல – விஜித மத்திய கல்லூரியைச் சேர்ந்த தருஷா ஹன்சிகா வெள்ளிப்பதக்கத்தையும், 4.72 மீற்றர் தூரம் பாய்ந்து கொட்டாஞ்சேனை – நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செலிஸ்டா கனனசேகர் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
சட்டவேலி ஓட்டத்தில் புதிய சாதனை
14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 80 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தின் அரையிறுதிப் போட்டியில் இரத்தினபுரி சுமானா மகளிர் வித்தியாலயத்தைச் சேரந்த டி. கஹகம, 12.9 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்தார்.
முன்னதாக 1996ஆம் ஆண்டு கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கிரிஷாந்தி ஜயதிலக்க, 13.6 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து நிலைநாட்டிய சாதனையை, 2014ஆம் ஆண்டு கண்டி ஸ்வர்ணபாலி பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த கே. தென்னகோன் (13.6 செக்கன்கள்) சமப்படுத்தயிருந்தார். இதன்படி, இம்முறை போட்டித் தொடரில் குறித்த இரண்டு வீராங்கனைகளது சாதனையை 21 வருடங்களுக்குப் பிறகு டி. கஹகம முறியடித்தார்.
ஹார்ட்லிக்கு முதல் பதக்கம்
இந்நிலையில் போட்டிகளின் முதல் நாளான இன்றைய தினம் 10 போட்டிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் பங்குபற்றல் மிகவும் குறைவாகக் காணப்பட்டாலும், கடந்த நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் கலந்துகொண்டு வருகின்ற யாழ். ஹார்ட்லி கல்லூரி சார்பாக இம்முறை 3 வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மிதுன் ராஜ், 13.42 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப்பதக்கம் வென்று, அக்கல்லூரிக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார்.
இந்நிலையில் மிதுன் ராஜ், கலந்துகொள்ளவுள்ள தட்டெறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகள் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.
இதேவேளை, அண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற வட பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பாடசாலை வீரர்கள், வழமை போன்று இம்முறை நடைபெற்ற சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குகொள்ளவில்லை.
>>சோதனைகளை தாண்டி சாதனை படைக்கும் யாழ். ஹார்ட்லியின் மெய்வல்லுனர்கள்<<
அத்துடன், 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த ரகுராஜா சன்ஜே துரதிஷ்டவசமாக வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழந்தார்.
குறித்த போட்டியில் முதற்தடவையாகக் களமிறங்கிய சன்ஜே, 35.32 மீற்றர் தூரத்தை எறிந்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், மருதானை புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த நவீன் மாரசிங்க (38.46 மீற்றர்) தங்கப்பதக்கத்தையும், கொட்டாஞ்சேனை புனித பெனெடிக் கல்லூரியைச் சேர்ந்த மிஹிந்து என் மஹேந்திரன் (37.70 மீற்றர்) வெள்ளிப்பதக்கத்தையும், வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஜெரில் பிலிப்ஸ் (35.37 மீற்றர்) வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
இதேவேளை போட்டித் தொடரின் 2ஆவது நாளான நாளைய (09) தினத்தில் 25 போட்டிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
FINAL RESULTS – Day 1 | |||||||
E:No. | 101 | Long Jump | Under 12 Boys | Final | 4.20 M | ||
Place | BIB | Athlete Name | School | Performance | Remarks | ||
1 | 212 | Anuk Kathriarachchi | Lyceum Int. ScH – Panadura | 5.03 | |||
2 | 238 | Chanuka Vithana | Marisstella Col – Negombo | 4.88 | |||
3 | 59 | Ovindu Nethsara | D.S. Senanayake Col – Col 07 | 4.83 | |||
4 | 434 | K.S. Hettiarachchi | St. John’s Col – Nugegoda | 4.79 | |||
5 | 859 | K.H.E.Gamage | Trinity College – Kandy | 4.77 | |||
6 | 1218 | W Nethum Mayantha | Sindathriya Sidukumari KV | 4.75 | |||
E:No. | 103 | Shot Put | Under 15 Boys | Final | 10.20 M | ||
Place | BIB | Athlete Name | School | Performance | Remarks | ||
1 | 514 | Chanupa Cooray | St. Peter’s Col -Colombo 04 | 13.74 | |||
2 | 778 | J.V.S. Nimantha Eduranga | Rathnaloka M.V. – Rakwana | 13.73 | |||
3 | 964 | Suseenthirakumar Mithunraj | Hartley Col – Point pedro | 13.41 | |||
4 | 556 | Achintha Weerakoon | St. Sebastian’s Col – Moratuwa | 12.64 | |||
5 | 365 | Thevindu Bogodage | Royal Col – Colombo 07 | 12.33 | |||
6 | 1113 | B.Kavisha Dilshan | St.Joshep Vaz College – Wennappuwa | 11.87 | |||
E:No. | 102 | High Jump | Under 12 Girls | Final | 1.15 M | ||
S No | BIB | Athlete Name | School | Performance | Remarks | ||
1 | 484 | M.L.N.B. Madagedara | Yasodara Devi Balika Vid – Gampaha | 1.35 | |||
2 | 451 | K.H. Mandara Basuri | Vijitha Central College – Dickwella | 1.30 | |||
3 | 893 | D.K.T. Jayarathna | President Girls College – Kurunegal | 1.30 | |||
4 | 78 | Maneesha Maduwanthi | Darmapala Vidyalaya – Pannipitiya | 1.25 | |||
5 | 1037 | BMHA Pathiraja | Nissanka NS – Kurunegala | 1.25 | |||
6 | 280 | Thisari D. Harischandra | Musaeus College – Colombo 11 | 1.20 | |||
E:No. | 104 | Discuss Throw | Under 15 Girls | Final | 19.20 M | ||
Place | BIB | Athlete Name | School | Performance | Remarks | ||
1 | 423 | W.K. Heshani Maheshika | St. Sebastian’s B.M.V. – Kandana | 35.46 | *NMR | ||
2 | 619 | H.A.V.L. Hapuararchchi | Sumana Balika Vidyalaya – Rathnapura | 26.91 | |||
3 | 837 | S.A.Y.P.Abeykoon | Galgamuwa M.V. | 23.75 | |||
4 | 415 | S.D. S. Dinushi Fonseka | St. Peters College – Negombo | 21.82 | |||
5 | 232 | I. Dewmini Gamage | Lyceum International School – Gampaha | 21.35 | |||
6 | 859 | E.A.D. Ayomi Ushika | Jeninngs Int. School – Nainamadama | 20.86 | |||
E:No. | 118 | High Jump | Under 13 Boys | Final | 1.35 M | ||
Place | BIB | Athlete Name | School | Performance | Remarks | ||
1 | 298 | A.P. Krishandan | O.K.I. International School – Wattala | 1.56 | |||
2 | 1138 | J.M. Pasindu Sandeepana | Sussex Col – Wennappuwa | 1.45 | |||
3 | 174 | Nushan Hiruk | Loyola Col – Daluwakotuwa | 1.40 | |||
3 | 169 | H. Kavindu Madusanka | Lenagala Junior Secondary School – Dedigamuwa | 1.40 | |||
5 | 1000 | I.M.S.T. Heshan | Maliyadeva Col- Kurunegala | 1.40 | |||
6 | 213 | Sandes Fonseka | Lyceum Int. Sch – Panadura | 1.40 | |||
E:No. | 123 | Jevelin Throw | Under 14 Girls | Final | 16.0 M | ||
Place | BIB | Athlete Name | School | Performance | Remarks | ||
1 | 244 | Senadi Raddalgoda | Lyceum International School – Wattala | 22.60 | |||
2 | 909 | M.M. Thewmini Dilara | Royal College – Polonnaruwa | 22.25 | |||
3 | 631 | R.A.G.M.P. Gunarathna | Swarnamali Girls College – Kandy | 21.25 | |||
4 | 948 | W.Dimalsha Dewdini | St. Rita;s College – Thaldeka | 20.73 | |||
5 | 364 | H.B. Oshinee Minupama | Sri Rahula Balika M.V. – Malabe | 19.57 | |||
6 | 149 | Suwishma Perera | Holy Family Convent – Colombo 04 | 17.27 | |||
E:No. | 119 | Long Jump | Under 13 Girls | Final | 3.90 M | ||
Place | BIB | Athlete Name | School | Performance | Remarks | ||
1 | 179 | P.A.D. Ruwansa Weerakkodi | Janadipathi Balika Vid – Nawala | 4.88 | * NMR | ||
2 | 454 | K.G. Tharushi Hansika | Vijitha Central College – Dickwella | 4.75 | |||
3 | 119 | Selista Gnanasekar | Good Shephered Girls M.V. – Colombo 13 | 4.72 | |||
4 | 858 | Dhanani R. Kodithuwakku | Jenings Int. School – Nainamadama | 4.71 | |||
5 | 455 | D. Chathuri Rasanjalee | Vijitha Central College – Dickwella | 4.66 | |||
6 | 459 | Isuri Amanda | Visakha Vidyalaya – Colombo 05 | 4.56 | |||
E:No. | 122 | Discuss Throw | Under 14 Boys | Final | 23.72 M | ||
Place | BIB | Athlete Name | School | Performance | Remarks | ||
1 | 458 | Naveen Marasingha | St. Joshep’s Col – Colombo 10 | 38.46 | |||
2 | 428 | Mihindu N Mahendran | St Benedict’s Col-col 13 | 37.70 | |||
3 | 197 | Jerril Phillips | Lyceum International School – Wattala | 35.37 | |||
4 | 962 | Ragurajah Sanjai | Hartley Col- Point Pedro | 35.32 | |||
5 | 98 | Shenan Fernando | De Mazanod College – Kandana | 30.89 | |||
6 | 508 | Dinodh Janz | St. Peters Col – Colombo 04 | 29.48 | |||
E:No. | 130 | Long Jump | Under 14 Boys | Final | 4.80 M | ||
Place | BIB | Athlete Name | School | Performance | Remarks | ||
1 | 1170 | H.A.Okanda Chathina | Wekada M.V. – Yogiyana | 5.77 | |||
2 | 437 | R.H. Tennakoon | St. John’s Col – Nugegoda | 5.70 | |||
3 | 490 | Rashmin Fernando | St. Jude’s College – Negombo | 5.59 | |||
4 | 51 | M. Imalka Akash | C.W.W. Kannangara C.C. – Hunumulla | 5.48 | |||
5 | 918 | H.M.S.Yasiru Herath | Anuradhapura C.C. | 5.45 | |||
6 | 64 | Manura Gathsara Peiris | D.S. Senanayake Col – Col 07 | 5.45 | |||
E:No. | 131 | High Jump | Under 14 Girls | Final | 1.27 M | ||
Place | BIB | Athlete Name | School | Performance | Remarks | ||
1 | 264 | I.A. Irasha Minoli | Mary Immaculate Convent – Tudella | 1.48 | |||
2 | 1042 | Ranindi Pehansa | Dharmapala College – Kottawa | 1.45 | |||
3 | 170 | I.P.E. Piyumali Chandrathilaka | Homagama M.V. | 1.41 | |||
4 | 25 | A.R. Jayathilaka | Ave Maria Convent – Negombo | 1.41 | |||
5 | 972 | R.M.R.S. Gunawardhana | Wayamba Royal College – Kurunegala | 1.41 | |||
6 | 66 | Senuri Carron | Convent Of Our Lady Victories – Moratuwa | 1.41 |