இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் பெப்ரவரியில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில், தென்னாபிரிக்க மகளிர் அணி செப்டம்பர் மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
அதற்கான முதல் கட்ட பயிற்சி முகாம் நேற்று (26) பிரிட்டோரியாவில் ஆரம்பமாகியது. அதற்கு முன்னோட்டமாக பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ள வீராங்கனைகள், அணி ஊழியர்கள், பயிற்சியாளர்கள் என 34 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 2 வீராங்கனைகள், ஒரு ஊழியர் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து முகாமில் இருந்து விலகியுள்ள 3 பேரும் தங்களை சுய தனிமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தென்னாபிரிக்கா கிரிக்கெட்டில் புதிதாக 6 பேருக்கு கொவிட் 19 தொற்று
இது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னாபிரிக்க பெண்கள் அணியில் கொவிட் – 19 தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 3 பேருக்கும் இலேசான அறிகுறிகள் கூட இல்லை.
எனினும், எங்கள் மருத்துவக் குழு அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும். அவர்கள் தங்களை 10 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். வீரர்கள், வீராங்கனைகள் மீண்டும் பயிற்சிக்கு திரும்பவும், விளையாடவும் எமது மருத்துவக் குழு வகுத்த நெறிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்க நாட்டு சட்டப்படி கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்களின் பெயர்களை அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிடவில்லை.
Video – டிவில்லியர்ஸ் Comeback எப்போது? |Sports RoundUp – Epi 124
இதனிடையே, முதல் கட்ட பயிற்சி முடிந்ததும் 2ஆவது கட்ட பயிற்சி முகாம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அப்போதும் 2வது முறையாக பயிற்சி முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும்.
இங்கிலாந்து செல்லும் தென்னாபிரிக்க பெண்கள் அணி அங்கு இரண்டு T20i மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் இறுதிப் பகுதியில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தனது நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஏழு பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தனது துடுப்பு மட்டை, ஜேர்ஸியை ஏலம் விடும் டு ப்ளெசிஸ்
அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று அணிகள் ஒரே போட்டியில் மோதும் 3டி கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு முன் அதில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<