இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக மூவரடங்கிய குழு நியமனம்

241

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மூவரடங்கிய தேர்தல் குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் தொர்புபட்ட அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் நேற்று (12) விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நான்கு மாதங்களில் நடத்தப்படும் என அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு ….

விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் புவனேக ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் சுமார் 45 நிமிடங்கள் நீடித்திருந்த அதேவேளை, திலங்க சுமதிபால மற்றும் நிஷாந்த ரணதுங்க தரப்பினரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

இதுஇவ்வாறிருக்க, நாட்டிலுள்ள 84 கிரிக்கெட் சங்கங்களின் பிரதிநிதிகளின் ஏகோபித்த முன்மொழிவுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்துவதற்காக மூவரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதிகளான சந்த்ரா ஜயதிலக்க, .எம் அபேரட்ன மற்றும் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரான சுனில் சிறிசேன ஆகியோர் இந்த தேர்தல் குழுவுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதியான தேவிகா தென்னகோன் மற்றும் அரச நிர்வாகத் துறையில் முன்னாள் ஓய்வுபெற்ற அதிகாரியான ஆர்.எம்.ஆர்.டி திஸாநாயக்க ஆகியோர் மேலதிக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவித்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் இந்த மூவரடங்கிய குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு மூன்று புதிய குழுக்கள் நியமிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ….

கடந்த மே மாதம் 31ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலில் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றை வெளியிடுமாறு குறித்த தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்ற நிஷாந்த ரணதுங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், ஜுன் 14ஆம் திகதி வரை தேர்தலை ஒத்திவைக்கும்படி இடைக்கால தடை உத்தரவொன்றையும் பிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தேர்தல் நடைபெறும் வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியின் கீழ் கொண்டுவருவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல் தொடர்பில் .சி.சியின் உயர் அதிகாரிகளை தெளிவுபடுத்துவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட குழுவினர் மூன்று தடவைகள் டுபாய் சென்று .சி.சியின் அவைத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து  இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடி, தேர்தலை விரைவில் நடத்துவதற்கான உத்தரவாதத்தையும் வழங்கியிருந்தனர்.

இலங்கை அணியின் ஆட்டத்தை விமர்சித்த சந்திக ஹதுருசிங்க

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…..

இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ப்ரீதி பத்மன் சுரசேன, வழக்கறிஞர் அர்ஜுன் ஒபேசேகர உள்ளிட்ட நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, புதிதாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தெரிவித்ததையடுத்து தேர்தலுக்கான தடை நீக்கப்பட்டது.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாக சபை கடந்த ஜுலை மாதம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்திருந்தது.

இதனையடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஆலோசனைக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் நடைபெறும் வரை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு உட்பட்டதாக ஆலோசனைக் குழு, சுற்றுப் போட்டிகள் குழு மற்றும் மத்தியஸ்தர்கள் குழு என 3 குழுக்கள் கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<