இலங்கை ‘A’ அணியின் தலைவராக திசர பெரேரா

566

பங்களாதேஷ் ‘A’ அணிக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான இலங்கை ‘A’ அணிக்கு சகலதுறை வீரர் திசர பெரேரா தலைவராக செயற்படவுள்ளார்.  

தற்போது ஐக்கிய இராச்சியத்தில் இருக்கும் திரச பெரேரா அங்கு இங்கிலாந்து உள்ளூர் டி-20 தொடரில் கிளோசஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் சில்ஹட்டில் எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் அணியுடன் இணையவுள்ளார். சகலதுறை வீரர் தசுன் ஷானக்க இலங்கை ‘A’ அணிக்கு உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜயசூரியவின் அபார சதத்தால் இலங்கை A அணி வலுவான நிலையில்

பங்களாதேஷுக்கு சுற்றும் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை A அணிக்கும் பங்களாதேஷ்…

இலங்கை ‘A’ அணி தற்போது பங்களாதேஷில் நான்கு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. அங்கிருக்கும் குழாமுடன் ஒருநாள் அணியின் சிறப்பு வீரர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13) பங்களாதேஷ் புறப்படவுள்ளனர்.

அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவும் இந்த குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு பயிற்சி பெறும் வகையில் அவர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

சரித் அசலங்க, சம்மு அஷான், மினோத் பானுக்க மற்றும் அசித் பெர்னாண்டோ போன்ற இளம் நட்சத்திரங்களும் 15 பேர் கொண்ட குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை ‘A’ குழாம் திசர பெரேரா (தலைவர்), தசுன் ஷானக்க (உப தலைவர்), உபுல் தரங்க, லஹிரு திரிமான்ன, ஷெஹான் ஜயசூரிய, அஷான் பிரியன்ஜன், சதீர சமரவிக்ரம, மினோத் பானுக்க, சரித் அசலங்க, சம்மு அஷான், மலிந்த புஷ்பகுமார, நிஷான் பீரிஸ், ஷெஹான் மதுஷங்க, அசித் பெர்னாண்டோ, இசுரு உதான.

மேலதிக வீரர்கள் – விஷ்வ பெர்னாண்டோ, சதுரங்க டி சில்வா, சாமிக்க கருணாரத்ன

ஒருநாள் போட்டி அட்டவணை

முதலாவது ஒருநாள் போட்டி – ஜூலை 17 – சில்ஹட்

இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூலை 19 – சில்ஹட்

மூன்றாவது ஒருநாள் போட்டி- ஜூலை 22 – சில்ஹட்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க