இலங்கையின் முப்படையைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் திசர பெரேரா தலைமையிலான இராணுவ கிரிக்கெட் அணி 500 ஓட்டங்களை எடுத்து அபார சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அத்துடன், இந்தப் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களாக திசர பெரேரா, அசேல குணரட்ன ஆகிய இருவரும் சதமடிக்க, சீக்குகே பிரசன்ன அரைச் சதம் அடித்தார்.
இலங்கையில் உள்ள முப்படைகளுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பு சேவைகள் ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 20ஆம் திகதி ஆரம்பமகியது.
அதிசிறந்த துடுப்பாட்ட பதிவுகளுடன் சமனிலையான முதல் டெஸ்ட் போட்டி
இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை கிரிக்கெட் அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றுவருகின்றன.
இந்த நிலையில், நேற்று (24) தொம்பகொட மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இராணுவ மற்றும் கடற்படை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இராணுவ அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 514 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய திசர பெரேரா சதம் கடந்து 52 பந்துகளில் 10 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 110 ஓட்டங்களை அதிரடியாக எடுத்தார்.
Video – பயிற்சியாளராக புதுஅவதாரம் எடுத்த Kumar Dharmasena..! | Sports Roundup – Epi 158
மறுபுறத்தில் துடுப்பாட்டத்தில் கலக்கிய அசேல குணரட்ன, 281.08 என்ற ஓட்ட வேகத்துடன் 38 பந்துகளில் ஆட்டமிழக்கமால் 107 ஓட்டங்களை எடுத்தார். இதில் 9 பௌண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.
இதனிடையே, இலங்கை அணியின் மற்றுமொரு நட்சத்திர சகலதுறை வீரரான சீக்குகே பிரசன்ன 68 ஓட்டங்களையும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அஷான் ரன்திக 72 ஓட்டங்களையும், துலின டில்ஷான் 137 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்து அந்த அணிக்கு வலுச்சேர்த்தனர்.
இதன்படி, இலங்கை இராணுவ அணி வீரர்கள் அனைவரும் 119.13 இற்கும் அதிகமாக ஓட்ட விகிதத்தை தமது இன்னிங்ஸில் பதிவு செய்தனர்.
அவுஸ்திரேலியாவின் மல்க்ரெவ் கழக தலைவரானார் டில்ஷான்
இதனையடுத்து 515 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய கடற்படை அணி, 24.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து படுதோல்வியை சந்தித்தது.
இந்தப் போட்டியானது லிஸ்ட் A போட்டிகளின் கீழ் இடம்பெறவில்லை என்ற காரணத்தால் இராணுவ அணி குவித்த 514 என்ற இமாலய ஓட்டங்கள் சாதனையாக கருதப்படவில்லை.
ஆனால், இராணுவ கிரிக்கெட் அணி வீரர்களின் திறமைகளை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
போட்டியின் சுருக்கம்
இராணுவ அணி – 514/4 (50) – துலின டில்ஷான் 137, திசர பெரேரா 110, அசேல குணரட்ன 107*, அஷான் ரன்திக 72, சீக்குகே பிரசன்ன 68, டிலன்க அவுவர்ட் 2/67
கடற்படை அணி – 56/10 (24.5) – துஷார சமரகோன் 12, துலின டில்ஷான் 2/07, யசோத மெண்டிஸ் 2/08, சுமின்த லக்ஷான் 2/13, தரிந்து கௌஷால் 2/18 சீக்குகே பிரசன்ன 1/10
முடிவு – இராணுவ அணி 458 ஓட்டங்களால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…