இம்முறை உலகக் கிண்ணம் குறித்து குமார் சங்கக்கார

1786

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார, இந்த ஆண்டு இடம்பெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் போட்டித்தன்மை கொண்டதாக அமையும் எனக் கூறியுள்ளதோடு, அதில் சிறந்த கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

தன்னம்பிக்கையுடன் உலகக் கிண்ணத்தை எதிர்கொள்வோம் – திமுத் கருணாரத்ன

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற …….

தற்போது 41ஆவது அகவையினை கடக்கும் குமார் சங்கக்கார, கிரிக்கெட்டின் சட்ட திட்டங்களை தீர்மானிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக மாறப்போகும் பிரித்தானியர் அல்லாத முதல் நபர் என்கிற கௌரவத்தினை அண்மையில் பெற்றிருந்தார். இதனை அடுத்து அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே சங்கக்கார, இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் உலகக் கிண்ணத் தொடர் பற்றி கருத்து குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கிண்ணம் மிகச் சிறந்த கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக அமையும் என்கிற உணர்வு என்னிடம் இருக்கின்றது. இத்தொடரில், போட்டித்தன்மை அதிகம் நிலவும் என்பதோடு, எங்களுக்கு நல்ல கிரிக்கெட் விளையாட்டினையும் எதிர்பார்க்க முடியுமாக உள்ளது. இரசிகர்களும் அதனை மகிழ்ச்சியுடன் பார்ப்பார்கள். இது விளையாட்டிற்கு ஒரு சிறந்த தருணமாக கருதப்படுவதோடு அதனை நானும் அதிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.” என சங்கக்கார குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம், குமார் சங்கக்கார, தற்போது புதிய அணிகள் சர்வதேச கிரிக்கெட்டிற்குள் இணைவது தொடர்பிலும் தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

”சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) இந்த விளையாட்டை விரிவுபடுத்த புதிய அணிகளை இணைப்பது நல்லதொரு வேலை என்று நினைக்கின்றேன். மெரில்போன் கிரிக்கெட் கழகமும், தனித்துவமான முறையில் திட்டங்களை வகுத்து புதிய நாடுகளை இணைக்கின்றது.”

பாகிஸ்தானின் சவாலான இலக்கை நெருக்கடி இன்றி எட்டிய இங்கிலாந்து

இலங்கை அணிக்காக இதுவரையில் நான்கு உலகக் கிண்ணத் தொடர்களில் ஆடியுள்ள குமார் சங்கக்கார மேலும் பேசும் போது, கிரிக்கெட்டை விரிவுபடுத்தும் அதே தருணத்தில் அதற்காக ஒவ்வொரு நாடுகளின் கிரிக்கெட் நிர்வாக சபைகளும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட் சபைகள் தங்களது (போட்டி) அட்டவணைகளை ஒழுங்கமைப்புச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம் ஐ.சி.சி. உம் எதிர்கால சுற்றுப்பயண நிகழ்ச்சித் திட்டங்களின் (FTP) போது கவனம் எடுக்க வேண்டும். சுற்றுப் பயணங்கள் இடையே (வீரர்கள்) தங்களை மீண்டும் தயார்படுத்துவதற்கான போதிய இடைவெளி கொடுக்கப்பட வேண்டியதும் சரியான முறையில் செய்யப்பட வேண்டும்.”

தற்போது பல்வேறு சர்வதேச கிரிக்கெட் தொடர்களும் உள்ளூர் தொடர்களும் இடம்பெறுகின்றன. இதனால், அவர்களுக்கு (ஐ.சி.சி. இற்கு) கிரிக்கெட் சபைகளுடன் இணைந்து விடயங்களை சரிப்படுத்த வேலை செய்ய வேண்டி உள்ளது. இது வீரர்களுக்காக மட்டுமில்லாது கிரிக்கெட் சபைகளுக்காகவும், பார்வையாளர்களுக்காகவும் சரி செய்யப்பட வேண்டியதாகும்.”  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<