இங்கிலாந்தை வீழ்த்தியமை பாகிஸ்தானின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி

285
Mohamed Hafeez
@Getty Image

நாங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும், அனைவரும் ஒன்றுசேர்ந்து தன்னம்பிக்கையுடன் விளையாடினோம். இதற்குமுன் நடைபெற்ற போட்டிகளில் நாங்கள் நம்பிக்கை கொண்டோம், ஆனால் வெற்றிபெற முடியாமல் போனது. ஆனால், இங்கிலாந்து அணியுடனான வெற்றியானது நிச்சயம் உடைமாற்றும் அறையில் உள்ள உணர்வை மாற்றும் என பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான மொஹமட் ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியான தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆறாவது…

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (03) நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை விழ்த்தி பாகிஸ்தான் அணி 14 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியது.

முதல் லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, அதில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. அத்துடன், தொடர்ச்சியாக 11 போட்டிகள் பெற்றுவந்த தொடர் தோல்விக்கும் அந்த அணி முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்து 62 பந்துகளில் 84 ஓட்டங்களையும், பந்துவீச்சில் இயென் மோர்கனின் விக்கெட்டையும் கைப்பற்றிய மொஹமட் ஹபீஸ், இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.  

களத்தடுப்பில் செய்த தவறே தோல்விக்குக் காரணம் – இயென் மோர்கன்

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் எமது வீரர்கள்…

எனவே, பாகிஸ்தான் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற மொஹமட் ஹபீஸ் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பாகிஸ்தான் அணியின் வெற்றி குறித்து கூறுகையில்,

இதற்குமுன் நாங்கள் நிறைய போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்தோம். ஆனால், எம்மால் வெற்றிபெற முடியும் என நம்பிக்கை வைத்தோம். எனவே, இந்த வெற்றி குறித்து நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம்.

எல்லோரும் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சரிவர செய்து முடித்தார்கள். போட்டி ஆரம்பமாவதற்கு முன் நாங்கள் ஒரு கூட்டத்தை நடத்தியிருந்தோம். சிறந்த முறையில் வலைப் பயிற்சிகளை முன்னெடுத்தோம். இதன்போது எம்மால் இந்தப் போட்டியை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

அதேபோல, தம்மால் இந்தப் போட்டியை வெற்றி கொள்ள முடியும் என ஒவ்வொரு வீரரும் நம்பிக்கை வைத்திருந்தனர். முதல் போட்டி எமக்கு சிறப்பாக அமையவில்லை. எனவே எமக்கு வெற்றியொன்று தான் தேவையாக இருந்தது. எனவே, இது ஒட்டுமொத்த அணியின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றி எங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். இதற்குமுன் நடைபெற்ற போட்டிகளில் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆனால் வெற்றிபெற முடியாமல் போனது. ஆனால் இந்த வெற்றி உடைமாற்றும் அறையில் உள்ள உணர்வை மாற்றும். அத்துடன், இந்த வெற்றிப் பயணத்தை எதிர்வரும் போட்டிகளிலும் தொடர்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என குறிப்பிட்டார்.

பொதுவாகவே ஆசிய அணிகளுக்கு இங்கிலாந்து ஆடகளங்களில் ஆடுவது சற்று சிறமமாக இருக்கும். அந்த வகையில் பாகிஸ்தான் அணியும் அண்மைய இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் இந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த ஹபீஸ்,

”நாங்கள் இந்தப் போட்டியில் மிகப் பெரிய நம்பிக்கையுடன் களமிறங்கினோம். நாங்கள் இதற்குமுன் இந்த மைதானத்தில் ஓருசில போட்டிகளில் விளையாடியிருந்தோம். அதில் எதிர்பாராத தோல்விகளை சந்திக்கவும் நேரிட்டது. இந்த ஆடுகளத்தில் 340 இற்கு அதிகமான ஓட்டங்களைக் குவிப்பதென்பது மிகப் பெரிய சவாலாகும். உண்மையில் இந்த ஆடுகளமானது வேகப் பந்துவீச்சு மிகவும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

ஆனாலும், சுழல் பந்துவீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளம் ஒத்துழைப்பு வழங்கியது. இறுதியில் நாங்கள் எதிர்பார்த்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக் கொண்டோம். எமது பந்து வீச்சாளர்கள் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி நெருக்கடி கொடுக்க நாங்கள் இந்த வெற்றியைப் பெற்றோம்.

அதேபோல, இப்போட்டியில் எனது வழமையான துடுப்பாட்ட பிரயோகங்களை மேற்கொண்டிருந்தேன். உண்மையில் அது எனக்கு இன்றைய போட்டியில் சாதகத்தை கொடுத்திருந்தது. நாங்கள் இங்கிலாந்துக்கு வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். உண்மையில் இங்கிலாந்து என்பது எமக்கு வீடு போன்றது” என தெரிவித் தார்.

இலங்கை இளையோரை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான நான்காவது…

இதேவேளை, பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட் இங்கிலாந்து அணியுடன் பெற்றுக்கொண்ட வெற்றி குறித்து போட்டியின் பிறகு இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,

இது ஒட்டுமொத்த அணியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். போட்டி 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதனால் முதல் 10 ஓவர்களும் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. இதில் பக்கர் ஸமான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர். இதனால் 350 ஓட்டங்கள் என்ற ஓட்ட எண்ணிக்கையைப் பெற முடிந்தது.

இந்தப் போட்டியில் ஒருசில வித்தியாசமான விடயங்களை நாங்கள் முயற்சித்தோம் இதில் போட்டியின் முதல் ஓவரை நாங்கள் சதாப் கானுக்கு வழங்கினோம். ஏனெனில் இங்கிலாந்து வீரர்கள் சுழல் பந்துவீச்சுக்கு தடுமாறுவார்கள் என்பதை அறிந்து வைத்திருந்தோம். அதேபோல, இந்தப் போட்டியின் வெற்றிக்கு எமது களத்தடுப்பு முக்கிய பங்கு வகித்திருந்தது. இவைதான் முக்கிய வித்தியாமசாகவும் காணப்பட்டன. எனவே, இந்த வெற்றியானது எமது அணிக்கு மிகப் பெரிய நம்பிகையைக் கொடுத்துள்ளது என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<