நாளை டுபாயில் ஆரம்பமாகும் 3ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் T-20 தொடர்

1151

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் 3ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் T-20 (PSL) போட்டித் தொடர் நாளை (22) ஐக்கிய அரபு இராட்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இம்முறை போட்டித் தொடருக்கான வெற்றிக் கிண்ணம் நேற்று(20) டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.  

பாக். சுப்பர் லீக்கில் இணையும் திசர பெரேரா, அசேல குணரத்ன

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படுகின்ற 3ஆவது பருவகால பாகிஸ்தான் சுப்பர் லீக் (பி.எஸ்.எல்) T-20…

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேதியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள ஆறு அணிகளின் தலைவர்களான இமாத் வசீம் (கராச்சி கிங்ஸ்), சர்பராஸ் அஹமட் (குவாட்டா கிளெடியேட்டர்ஸ்), டெரன் சமி (பெஷாவர் சல்மி), பிரெண்டன் மெக்கலம் (லாகூர் கெலண்டர்ஸ்), மிஸ்பா உல் ஹக் (இஸ்லாமாபாத் யுனைடெட்), சொயிப் மலிக் (சுல்தான் முல்தான்ஸ்) ஆகியோரும் அந்தந்த அணிகளின் உரிமையாளர்களும் பங்குபற்றியிருந்துடன், இதன்போது விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

பாகிஸ்தான் சுப்பர் லீக் T-20 தொடரின் மூன்றாவது அத்தியாயம் டுபாயில் நாளை(22) ஆரம்பமாகவுள்ளதுடன், இதில் பாகிஸ்தானின் பிரபல சூபி பாடகரான அபிபா பர்வீன், அமெரிக்காவின் பொப் பாடகர் ஜேசன் டெரூலோ ஆகியோரின் பங்குபற்றலுடன் கண்கவர் இசை நிகழ்ச்சியொன்றும் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள ஆரம்ப போட்டியில் நடப்புச் சம்பியனான டெரன் சமி தலைமையிலான பெஷாவர் சல்மி அணியை எதிர்த்து புதிய அணியாக இணைந்துகொண்டுள்ள சொயிப் மலிக் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணி போட்டியிடவுள்ளது.  

இந்நிலையில், இம்முறை போட்டித் தொடரில் இடம்பெறவுள்ள 34 லீக் போட்டிகளும் ஐக்கிய அரபு இராட்சியத்தின் டுபாய் மற்றும் சார்ஜா ஆகிய மைதானங்களிலும், அரையிறுதிப் போட்டிகள் லாகூரிலும், இறுதிப் போட்டி கராச்சியிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தரவரிசையில் கோஹ்லி, ரஷீத் கான் புதிய மைல்கல்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தரவரிசைகள் ஒவ்வொரு போட்டித் தொடர்களின் முடிவிலும் வெளியிடப்பட்டு …

மேலும், லீக் சுற்றுப் போட்டியின் போது சகல அணிகளும் ஒன்றையொன்று இரண்டு தடவைகள் எதிர்த்து போட்டியிடவுள்ளன. லீக் சுற்றுக்களின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பெற்றுக்கொள்ளும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.

இதேவளை, இம்முறை போட்டித் தொடரில் விளையாடுவதற்காக இலங்கையிலிருந்து 2 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் இலங்கை சார்பாக, முன்னாள் நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார மற்றும் அஞ்சலோ மெதிவ்ஸ் ஆகியோர் வாங்கப்பட்டனர்.

கடந்த வருடம் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடிய, இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்காரவை முல்தான் சுல்தான்ஸ் அணி ஒப்பந்தம் செய்ததுடன், அவ்வணியின் ஆலோசகராகவும் அவர் செயற்படவுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெற்றுவருகின்ற T-20 போட்டித் தொடர்களில் விளையாடி வருகின்ற சங்கக்கார, கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

அத்துடன், இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான திசர பெரேராவை, முல்தான் சுல்தான்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. அவ்வணிக்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிருக்கு பதிலாக ஒரு சில போட்டிகளில் திசர பெரேரா விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீரர்களின் திறமைக்குதான் வெற்றி கிடைத்தது என்கிறார் ஹத்துருசிங்க

இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷில் பெற்றுக்கொண்ட தொடர் வெற்றியானது தனது திறமையை காட்டிலும் அணியில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு வீரர்களினதும்

உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெற்றுவருகின்ற T-20 போட்டித் தொடர்களில் விளையாடி வருகின்ற திசர பெரேரா, கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் குவாட்டா கிளெடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், லாகூர் கிளெண்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை ஒரு நாள் மற்றும் T-20 அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் உபாதை காரணமாக இம்முறை போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அதேபோல, அண்மைய காலங்களில் கிரிக்கெட் அரங்கில் வளர்ந்து வரும் அதிரடி வீரராக விளங்குகின்ற அசேல குணரத்னவை இஸ்லாமாபாத் யுனைடெட் ஒப்பந்தம் செய்திருந்தது. எனினும், பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் பாகிஸ்தான் சுப்பர் லீக்கிலிருந்து விலகிக் கொண்டதுடன், அவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் சகலதுறை வீரரான சமித் பட்டேல் ஒப்பந்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை போட்டித் தொடரிலும் உலகின் முன்னணி வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் இங்கிலாந்தின் இயென் மோர்கன், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜேசன் ரோய், பங்களாதேஷின் தமீம் இக்பால், மஹ்முதுல்லாஹ் மற்றும் முஸ்தபிசூர் ரஹ்மான், அவுஸ்திரேலியாவின் ஷேன் வொட்சன் மற்றும் கிறிஸ் லையன், மேற்கிந்திய தீவுகளின் அன்ட்ரூ ரஸல், சாமுவேல் பத்ரி, டுவைன் பிராவோ மற்றும் கிரென் பொல்லார்ட் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.