நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் திலான் சமரவீர

369
Thilan Samaraweera
@Getty Images

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான திலான் சமரவீர, நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு குழாத்தில் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கை கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 48.76 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 5,462 ஓட்டங்களைக் குவித்திருக்கும் திலான் சமரவீர, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவருகின்றார். 

>> SLC அழைப்பு T20 தொடருக்கான போட்டி அதிகாரிகள் அறிவிப்பு

அந்தவகையில் இலங்கை, பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக பணிபுரிந்த திலான் சமரவீர, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடுகின்ற அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராகவும் இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக செயற்பட்டிருந்த திலான் சமரவீர, தற்போது நியூசிலாந்து அணியுடன் மீண்டும் இணைந்திருக்கின்றார். 

>> கவுண்டி அணிக்காக ஆடவுள்ள திமுத் கருணாரட்ன

அதன்படி, திலான் சமரவீர செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணிக்கு தனது பயிற்றுவிப்பு பணிகளை வழங்கவிருக்கின்றார்.

தமது இரண்டாம் நிலை அணிகளுடன் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு செல்லும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி பங்களாதேஷ் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் ஆடுகின்றது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<