இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர, இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ThePapare.com இற்கு அறியக்கிடைத்துள்ளது.
இந்திய தொடரில் விளையாடவுள்ள மெதிவ்ஸின் எதிர்பார்ப்பு
இலங்கை கிரிக்கெட் அணி இம்மாதம் நடுப்பகுதியில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்…
தற்பொழுது 40 வயதையுடைய சமரவீர, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இடம்பெறும் உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடையும்வரை இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அணிக்காக 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சமரவீர, 48 ஐ விட அதிகமான துடுப்பாட்ட சராசரியுடன் 5,000 க்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றுள்ள ஒரு வீரராவார்.
கடந்த 2013ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற திலான் சமரவீர, அதன் பின்னர் அவுஸ்திரேலியாவில் குடிபெயர்ந்ததுடன், பயிற்றுவிப்பில் பல அனுபவங்களைப் பெற்றார். அவற்றில் முக்கியமாக மிக வேகமாக வளர்ச்சி கண்ட பங்களாதேஷ் தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக திலான் கடமையாற்றியதைக் குறிப்பிடலாம்.
இலங்கை கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T20 போட்டித் தொடர்களில் பங்கு கொள்வதற்காக இந்தியா செல்லவுள்ளது. இதற்கு முன்னதாக எதிர்வரும் திங்கட்கிழமை சமரவீர இலங்கைக்கு வந்து தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என நம்பப்படுகின்றது.
இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிரஹம் போர்ட், இவ்வருடம் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் பின்னர் குறித்த பதவியில் இருந்து அதிரடியாக இராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, அண்மையில் நிறைவடைந்த ஜிம்பாப்வே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான தொடர்களுக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ஹஷான் திலகரத்ன மற்றும் அவிஷ்க குனவர்தன ஆகியோர் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர்களாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
டெல்லோனின் அதிரடி பந்து வீச்சால் புனித தோமியர் கல்லூரிக்கு பரபரப்பு வெற்றி
சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1)…