வெறும் 30 வயது மாத்திரம் நிரம்பிய தென்னாபிரிக்க அணியின் வலதுகை துடுப்பாட்டவீரரான தியுனிஸ் டி பிரய்ன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தீடிர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
பங்களாதேஷ் அணிக்கு திரும்பிய தமீம் இக்பால்!
அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் பெற்ற டி பிரய்ன் இதுவரை 13 டெஸ்ட் மற்றும் 2 T20I போட்டிகளில் ஆடியுள்ள நிலையிலையே சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை வழங்கியிருக்கின்றார்.
டி பிரய்னின் ஓய்வு அறிவிப்பானது அவரின் உள்ளூர் கழகமான டைடன்ஸ் அணி மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றது. தனது ஓய்வு அறிவிப்பில் டி பிரய்ன் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடியது கௌரவம் தரும் விடயமாக அமைந்திருக்கின்றது எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
கடந்த ஆண்டு மெல்பேர்னில் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணியினை பிரதிநிதித்துவம் செய்த டி பிரய்ன் ஒரு சதம் அடங்கலாக 25 இன்னிங்ஸ்களில் 468 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை A குழாம் அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் ஓய்வினை அடுத்து டி பிரய்ன் உள்ளூர் T20 லீக்குககளில் தொடர்ந்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி பிரய்ன் அண்மையில் நடைபெற்று முடிந்த SA20 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான ப்ரெடோரியா கெபிடல்ஸ் அணிக்காக விளையாடி இருந்ததோடு, தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த துடுப்பாட்டவீரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தினைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<