இந்தியாவுக்கு எதிரான T20 தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவுஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க துடுப்பாட்ட வீரரான ட்ராவிஸ் ஹெட் விடுவிக்கப்பட்டுள்ளார்.
>>ஐசிசி மகளிர் உலகக்கிண்ணத்தை வென்றது இந்திய அணி<<
இந்த ஆண்டின் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்காக...
இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இந்திய மகளிர் அணி முதன்முறையாக சம்பியனாக மகுடம் சூடியது.
மும்பை - டிவை பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் முதன்முறையாக தகுதிபெற்றிருந்தன.
ரைசிங் ஸ்டார்ஸ் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது
இந்த இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தெரிவுசெய்ய, இந்திய அணிக்கு ஷபாலி வர்மா சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.
இவர் 78 பந்துகளுக்கு 87 ஓட்டங்களை விளாசியதுடன், தீப்தி ஷர்மா 58 ஓட்டங்களையும், ஸ்ம்ரிதி மந்தனா 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களை குவித்தது. பந்துவீச்சில் அயபோங்கா ககா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி லவுரா வொல்வார்ட் 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து சிறந்த ஆரம்பத்தை கொடுத்த போதும், மறுபக்கத்தில் பங்களிப்பு சரியாக கிடைக்கப்பெறாமையால் 246 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கொல்கத்தா அணியின் புதிய பயிற்றுவிப்பாளராகும் நாயர்
இந்திய அணியின் பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஷபாலி வர்மா பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தார்.
முதன்முறையாக இந்திய மகளிர் அணி உலகக்கிண்ணத்தை வென்றதுடன், இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகியாக ஷபாலி வர்மாவும், தொடர் ஆட்ட நாயகியாக தீப்தி ஷர்மாவும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
கொழும்பு ரேஸ் கோர்ஸ் சர்வதேச கால்பந்து அரங்கில், கொழும்பு ஸாஹிரா கல்லூரி மற்றும் கொழும்பு ஹமீட் அல்-ஹுசைனி கல்லூரிகள் இடையே முதற்தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்ற ஹெரிடேஜ் டர்பி கால்பந்து போட்டி குறித்த...
இலங்கையில் நடைபெற்றுமுடிந்த SLC T20 League தொடரில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்திய சாமிக்க கருணாரத்னவுக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்பது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட்...