பத்திரிசியாரின் இரண்டு புள்ளிகளை பறித்த மாரிஸ் ஸ்டெலாவின் பெரேரா

621

ThePapare.com இன் அனுசரணையில் நடைபெறும் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் B குழுவில் இடம்பெற்றிருக்கும் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெலா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளுக்கு இடையில் (02) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற பலப்பரீட்சையில், ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவிற்கு வந்தது.   

சமநிலையில் நிறைவுற்ற ஸாஹிரா – மகாஜனா இடையிலான விறுவிறுப்பான மோதல்

ThePapare.com இன் அனுசரணையில் இடம்பெறும் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இன்று

மாரிஸ் ஸ்டெலா கல்லூரி வீரர்கள் முன்னைய இண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்த அதேவேளை, பத்திரிசியார் கல்லூரியினர் ஒரு போட்டியில் வெற்றியினையும் மற்றைய போட்டியினை சமநிலையிலும் நிறைவு செய்திருந்தனர். இந்நிலையில் இடம்பெற்ற இப்போட்டி காலிறுதி வாய்ப்பினை பிரகாசப்படுத்துவதற்கு இரு அணியினரிற்கும் முக்கிய போட்டியாக அமைந்திருந்தது.    

போட்டியின் முதலாவது கோல் முயற்சியினை சாந்தன் மேற்கொண்ட போதும் அது ஓப் சைற்றாக அமைந்திருந்தது.  

பந்தினை புனித பத்திரிசியார் கோல் பரப்பினை நோக்கி எடுத்துவந்த மாரிஸ் ஸ்டெலா வீரர்கள் அடுத்தடுத்து கோல் முயற்சிகளை மேற்கொண்ட போதும்  பந்தினை புனித பத்திரிசியார் பின்கள வீரர்களைத்தாண்டி உள்ளனுப்ப முடியவில்லை.   

புனித பத்திரிசியார் வீரர் ஹெயின்ஸ் வலது பக்கத்திலிருந்து உள்ளனுப்பிய பந்தினை கிறிஸ்ரீபன் கோலினை நோக்கி ஹெடர் செய்தார். எனினும் பந்து சற்று அகலமாக வெளியேறியது.

ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் அபீசனிடமிருந்து பந்தினை பெற்ற ஹெயின்ஸ், கோலினை நோக்கி உதைய எத்தனிக்கையில் முன்னேறிவந்த மாரிஸ் ஸ்டெலா கோல்காப்பாளரினை ஏமாற்றி ஹெயின்ஸ் கோலினை நோக்கி செலுத்தினார். பந்து துரதிஷ்டவசமாக கோல்கம்பத்தில் பட்டு வெளியேறியது.  

அடுத்த முயற்சியாக ஹெயின்ஸ் கோலினை நோக்கி உதைய, பந்தினை வெளியேற்ற எத்தனித்த மாரிஸ் ஸ்டெலா வீரரின் தலையில் அதுபட்டு கோல் நோக்கி செல்ல, விரைந்து செயற்பட்ட கோல்காப்பாளர் பெரேரா பந்தினை அங்கிருந்து வெளியேற்றினார்.

Photos: St. Patrick’s College vs Maris Stella College – ThePapare Football Championship 2018

ThePapare.com | Murugaiah Saravanan | 02/11/2018 Editing and re-using images without permission of ThePapare.com will

வலது பக்கத்திலிருந்து ஷமிந்த கோலிற்கு உதைந்த பந்து கோல்கம்பத்திற்கு அருகால் வெளியேறியது. மத்திய கோட்டிற்கு அருகில் கிடைத்த ப்ரீ கிக்கினை நீர்கொழும்பு வீரர் தரிந்த சில்வா உதைய பந்து மயிரிழையில் கோலிற்கு மேலால் வெளியேறியது.

புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்கள் சாந்தன் மூலமாக இரண்டு கோணர் கிக் உள்ளடங்கலாக 5 கோல் முயற்சிகளை மேற்கொண்டனர். மிக நேர்த்தியாக செயற்பட்ட கோல்காப்பாளர் பெரேரா அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார்.   

மீண்டும் 26 ஆவது நிமிடத்தில் சாந்தன் உள்ளனுப்பிய பந்தினை, பெரேராவால் தடுக்க முடியாது போக அந்த கோலுடன் முன்னிலை பெற்றது புனித பத்திரிசியார் கல்லூரி.

ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து தரிந்த சில்வா வழங்கிய சிறந்த பந்துப்பரிமாற்றத்தினை, கோல்காப்பாளர் டட்லி ஜெனராஜ்ஜை ஏமாற்றி மொகமட் ஷிபான் கோலிற்கு தட்டிய போதும், விரைந்து செயற்பட்ட அன்ரனிதாஸ் பந்தினை வெளியேற்றினார்.  

39ஆவது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பினை நேர்த்தியாக பயன்படுத்திய பெர்னாண்டோ, மாரிஸ் ஸ்டெலா அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்து கோல் கணக்கினை சமன் செய்தார்.   

முதல் பாதி: புனித பத்திரிசியார் கல்லூரி 1 – 1 மாரிஸ் ஸ்டெலா கல்லூரி

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே மாரிஸ் ஸ்டெலாவின் கோல் பரப்பினை ஆக்கிரமித்த யாழ் வீரர்கள் பவிராஜ்  ஊடாக பந்தினை உள்ளனுபினர். எனினும் நீர்கொழும்பு வீரர்கள் அதனைத் தடுத்தாடினர்.  

மறுபுறம் மாரிஸ் ஸ்டெலாவின் முன்கள வீரர்களின் முயற்சிகளினை றுபேர்ட் தனுஜன் சிறப்பாக முறியடித்தார்.  

சமநிலையில் நிறைவுற்ற கம்பளை ஸாஹிரா, புனித ஜோசப் இடையிலான மோதல்

ThePapare.com நடாத்தும் பாடசாலைகளுக்கு இடையிலான ThePapare சம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் கம்பளை ஸாஹிரா

போட்டியின் 55ஆவது நிமிடத்தில் யாழ் வீரர்களிற்கு கிடைத்த கோணர் உதையினை ஹெய்ன்ஸ் உள்ளனுப்ப, சாந்தன் பந்தினை ஹெடர் மூலம் கோலினை நோக்கி திசைதிருப்பிய போதும் பந்து கம்பத்திற்கு மேலால் வெளியேறியது.

82ஆவது நிமிடத்தில் கிறிஸ்ரீபன் கோலிற்கு உதைந்த பந்தினை மாரிஸ் ஸ்டெலா வீரர் தடுக்க முற்பட்டபோது பந்து காலில் பட்டு கோலினை நோக்கி நகர்ந்தது. விரைந்து செயற்பட்ட டிலக்சன் பந்தினை கோலாக்குவதற்கு எத்தனித்தபோதும், கம்பத்திற்கு மேலால் உதைந்து சந்தர்ப்பத்தினை வீணடித்தார்.  

போட்டி நிறைவடைவதற்கு 5 நிமிடங்களிருக்கையில் மாரிஸ் ஸ்டெலாவின் தலைவர் தரிந்த சில்வா புனித பத்திரிசியார் வீரர்களை லாவகமாக ஏமாற்றிச் சென்று கோலினை நோக்கி பந்தினை உதைந்தார். பந்து கோலிற்கு அருகாமையால் வெளியேற குறித்த வாய்ப்பும் நழுவியது.   

போட்டியின் இறுதி நிமிடத்தில் ஹெயின்சிற்கு பதிலாக உள் அழைக்கப்பட்டிருந்த வீரர் சாம்சன் மேற்கொண்ட முயற்சியினையும் கோல்காப்பாளர் பெரேரா சிறப்பாக பாய்ந்து தட்டினார்.    

எனவே, முதல் பாதியில் பெறப்பட்ட இரு கோல்களுக்கும் மேலதிகமாக எந்தவொரு கோலும் இல்லாதவாறு ஆட்டம் சமநிலையில் நிறைவிற்கு வந்தது. இந்த போட்டி முடிவுடன் புனித பத்திரிசியார் வீரர்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் சமநிலையான முடிவைப் பெற்றுள்ளனர்.

முழு நேரம்: புனித பத்திரிசியார் கல்லூரி 1 – 1 மாரிஸ் ஸ்டெலா கல்லூரி

Thepapare.com இன் ஆட்டநாயகன் – பெரேரா (மாரிஸ் ஸ்டெலா கல்லூரி, நீர்கொழும்பு)

கோல் பெற்றவர்கள்

புனித பத்திரிசியார் கல்லூரி  – ரெஜிக்குமார் சாந்தன் 26′

மாரிஸ் ஸ்டெலா கல்லூரி – பெர்னாண்டோ 39′

மஞ்சள் அட்டை

புனித பத்திரிசியார் கல்லூரி – ஹெய்ன்ஸ் 58’, பிறீசன் 69’, அபீசன் 74’

மாரிஸ் ஸ்டெலா கல்லூரி – ஷமிந்த 77′

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க