ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம் இடத்திற்கான போட்டி கொழும்பு, குதிரைப்பந்தயத்திடல் அரங்கில் நாளை (26) நடைபெறவுள்ளது.
இரண்டாவது முறையாக நடைபெறும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பாடசாலை கால்பந்து போட்டிகளில் பலம்கொண்ட அணியான கொழும்பு ஸாஹிரா கல்லூரி, பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியை சந்தித்த நடப்புச் சம்பியன் புனித ஜோசப் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிகளுக்கு இடையிலான மூன்றாவது இடத்தை நிர்ணயிக்கும் போட்டி நாளை மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஆரம்பமான ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் ஆரம்ப சுற்றில் 20 பாடசாலை அணிகள் பங்கேற்றன. டி குழுவில் முதல் இடத்தை பெற்று காலிறுதிக்கு முன்னேறிய புனித பேதுரு கல்லூரி காலிறுதியில் யாழ். மத்திய கல்லூரியை வீழ்த்தி தொடர்ந்து அரையிறுதியில் நடப்புச் சம்பியன் புனித ஜோசப் கல்லூரியை தோற்கடித்தே இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டது.
ரசூனியாவின் கடைசி நேர கோல் மூலம் புனித பேதுரு இறுதிப் போட்டிக்கு தகுதி
புனித பேதுரு கல்லூரி தேசிய அணி வீரர் ஷபீர் ரசூனியாவில் பெரிதும் தங்கியுள்ளது. அவரது தீர்க்கமான கோல்களினாலேயே நொக் அவுட் சுற்றுப் போட்டிகளில் அந்த அணியால் வெற்றி பெற முடிந்தது. இவர் தவிர மொஹமட் செயிட் போன்ற முக்கிய வீரர்களும் அந்த குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
எனினும், போட்டியின் கடைசி நிமிடங்களில் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல்களை பெறுவதன் மூலமே அந்த அணி கடந்த போட்டிகளில் வெற்றியை பெற்று வந்தது. இந்த உத்தி ஸாஹிரா கல்லூரியிடம் பலிக்குமா? என்று நாளை போட்டியில் பார்க்க முடியுமாக இருக்கும்.
மறுபுறம் இந்தத் தொடரில் தோல்வியுறாத அணியாகவே ஸாஹிரா கல்லூரி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கின்றது. மொஹமட் ஆகிப் முதற்கொண்டு ராசா ரூமி, மொஹமட் சாஜித் என்று அனைத்து வீரர்களும் திறமையானவர்கள்.
Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஸாஹிரா தகுதி
Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் 2019 தொடரின் ……………..
காலிறுதியில் டி மசனோட் கல்லூரியை 3-0 என்றும் அரையிறுதியில் புனித பத்திரிசியார் கல்லூரியை 3-1 என்றும் இலகுவாக வென்ற ஸாஹிரா கல்லூரி நம்பிக்கையுடனேயே இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளது.
ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியின் நேரடி அஞ்சலினை ThePapare.com இல் கண்டுகளிக்க முடியும்.
>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<