களுத்தறை முஸ்லிம் மத்திய கல்லூரியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் 2022 தொடரின் காலிறுதிப் போட்டியில் இருந்து அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது.
இதனால், ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் புனித பத்திரிசியார் கல்லூரி தொடர்ந்து மூன்றாவது முறை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
முன்னர் இடம்பெற்று முடிந்த தொடரின் குழு நிலைப் போட்டிகளின் நிறைவில் புனித பத்திரிசியார் கல்லூரி தாம் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று குழு D யில் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தெரிவாகியது.
>> கேட்வே கல்லூரியை வீழ்த்திய யாழ் மத்திய கல்லூரி அரையிறுதிக்கு தெரிவு
மறுமுனையில், ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் புதிய அணியாக இம்முறை இணைந்த களுத்தறை முஸ்லிம் மத்திய கல்லூரி வீரர்கள் 2 வெற்றிகள் மற்றும் தலா ஒரு தோல்வி, ஒரு சமநிலையான முடிவுகளுடன் 7 புள்ளிகளைப் பெற்று A குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்று, காலிறுதிக்கு தெரிவாகினர்.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான காலிறுதிப் போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணியினரும் சம அளவிலான பலத்துடன் மோதினாலும் ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் ரோஹித், புனித பத்திரிசியார் கல்லூரிக்கான முதல் கோலைப் பெற்று முதல் பாதியில் அவ்வணியை முன்னிலைப்படுத்தினார்.
தொடர்ந்து இரண்டாம் பாதியின் 75ஆவது நிமிடத்தில் ஜெரொம் மூலம் அடுத்த கோலைப் பெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி, போட்டி நிறைவில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று தொடரின் அரையிறுதிக்கு இரண்டாவது அணியாக தெரிவாகியது.
முழு நேரம்: புனித பத்திரிசியார் கல்லூரி 2 – 0 களுத்தறை முஸ்லிம் மத்திய கல்லூரி
கோல் பெற்றவர்கள்
புனித பத்திரிசியார் கல்லூரி – V. ரோஹித் 28’, AJ. ஜெரொம் 75’
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<