புனித பெனடிக் கல்லூரியை இலகுவாக வீழ்த்தியது கொழும்பு ஸாஹிரா

309

பாடசாலை அணிகளுக்கு இடையிலான Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் நான்காவது வாரப் போட்டிகள் புதன்கிழமை (22)ஆரம்பமாகின. அவற்றில் இதுவரை முடிந்த போட்டிகளின் முடிவுகள் இதோ… 

கொழும்பு ஸாஹிரா கல்லூரி எதிர் புனித பெனடிக் கல்லூரி

வெள்ளிக் கிழமை (24) களனிய கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஸாஹிரா அணி வீரர்களே ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்தினர்.

>>புகைப்படங்களைப்  பார்வையிட<<

போட்டி ஆரம்பித்து 2 நிமிடங்களிலேயே தேசிய அணி வீரர் மொஹட் ஆகிப் ஸாஹிரா அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார். எனினும், அதன் பின்னர் எந்தவித கோல்களும் பெறாமலேயே முதல் பாதி ஆட்டம் நிறைவுற்றது.

முதல் பாதி – ஸாஹிரா கல்லூரி 1 – 0 புனித பெனடிக் கல்லூரி 

போட்டியின் 50ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் உதையின்போது எதிரணியின் மத்திய களத்தில் ஒரு திசையில் இருந்து மெஹமட் சாஜித் உதைந்த பந்து பெனடிக் கோல் காப்பாளருக்கு மேலால் கோலுக்குள் சென்றது.

மீண்டும் 68ஆவது நிமிடத்தில் ஆகிப் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

ஸாஹிரா அணிக்கு மாற்று வீரராக உள்வந்த மொஹமட் அமனுல்லா மைதானத்திற்குள் வந்த சில நிமிடங்களிலேயே சாஜித் வழங்கிய பந்தை ஹெடர் செய்து ஸாஹிரா அணிக்கான நான்காவது கோலையும் பெற்றுக் கொடுத்தார்.

போட்டி நிறைவில் 4-0 என பெற்ற வெற்றியின் மூலம் ஸாஹிரா கல்லூரி வீரர்கள் தாம் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் குழுவில் முதல் இடத்தில் நீடிக்கின்றனர்.

முழு நேரம் – ஸாஹிரா கல்லூரி 4 – 0 புனித பெனடிக் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

  • ஸாஹிரா கல்லூரி – மொஹமட் ஆகிப் 2’ & 68’, மொஹமட் சாஜித் 50’, மொஹமட் அமனுல்லா 86’

சிவப்பு அட்டை

  • புனித பெனடிக் கல்லூரி – சன்கல்ப 78’

ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி

கொழும்பு புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற குழு டி இற்கான இந்தப் போட்டிஇரு அணிகளுக்கும் மிக முக்கிய மோதலாக இருந்தது.

ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளையும் சமநிலையில் நிறைவு செய்த ஹமீட் அல்ஹுஸைனிவீரர்களுக்கு குழு நிலையில் மோதும் இந்த இறுதி மோதலில் கட்டாய வெற்றி தோவையாக இருந்தது.

வாய்ப்புக்கள் வீணாக பாரோ அணியை சமன் செய்த டிபெண்டர்ஸ்

பூட்டானின் பாரோ கால்பந்து கழகத்திற்கு எதிராக இடம்பெற்ற 2020 AFC கிண்ண…

மறுமுனையில் சொந்த மைதான தரப்பினர் தாம் விளையாடிய முதல் போட்டியில் பதுரியா மத்திய கல்லூரியிடம் தோல்வியடைந்த நிலையில், தமதுமுதல் வெற்றிக்காக இந்த மோதலில் களம் கண்டனர்.

ஹமீட் அல் ஹுஸைனி வீரர்களின் ஆதிக்கத்துடன் நிறைவடைந்த முதல்பாதியில் எந்த அணி வீரர்களும் கோல் பெறவில்லை.

முதல் பாதி – ஹமீத் அல் ஹுஸைனி 1 – 1 புனித பேதுரு கல்லூரி

இரண்டாவது பாதியில் தமது ஆட்டத்தில் வேகத்தைக் காண்பித்த புனித பேதுருகல்லூரிக்கு 60ஆவது நிமிடத்தில் போட்டியின் முதல் கோல் கிடைத்தது. மத்தியகளத்தில் இருந்து வழங்கப்பட்ட பந்தை பெற்ற மொஹமட் சைட் அதனை கயான் ரிவால்டோவுக்கு வழங்க, ரிவால்டோ அதனை கோலாக்கினார்.

அதன் பின்னர் கோலுக்கான அதிகமான வாய்ப்புக்களை ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் அடுத்தடுத்து பெற்றனர். எனினும், அவர்களால் கோலுக்கான நிறைவை மேற்கொள்ள முடியவில்லை.

எனினும், போட்டியில் 90 நிமிடங்கள் கடந்த நிலையில் பெனால்டி பெட்டியின் ஒரு திசையில் இருந்து நதீர் கோல் நோக்கி உதைந்த பந்து கம்பங்களுக்குள் செல்ல ஆட்டம் சமநிலையடைந்தது.

ஸாஹிராவுக்கு இலகு வெற்றி: நடப்புச் சம்பியனை சமன் செய்த றோயல் கல்லூரி

பாடசாலை அணிகளுக்கு இடையிலான ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் …

எனினும், எஞ்சிய சில நிமிடங்களில் கோல்கள் எதுவும் பெறப்படாமையினால் ஆட்டம் 1-1 என சமநிலையில் நிறைவடைந்தது.

எனவே, தமது 3 போட்டிகளிலும் சமநிலையான முடிவைப் பெற்ற ஹமீட் அல் ஹுஸைனி அணி 3 புள்ளிகளைப் பெற்று, Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றுடன் வெளியேறுகின்றது.

முழு நேரம் – ஹமீத் அல் ஹுஸைனி 1 – 1 புனித பேதுரு கல்லூரி

கோல் பெற்றவர்கள்

  • புனித பேதுரு கல்லூரி – கயான் ரிவால்டோ 60’
  • ஹமீத் அல் ஹுஸைனி – மொஹமட் நதீர் 90’

புனித ஹென்றியரசர் கல்லூரி எதிர் பதுரிய கல்லூரி

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற இந்தப் போட்டியில் மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி, இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணிகள் போட்டியிட்டிருந்தன. போட்டியின் முழு நேரமும் ஆதிக்கம் செலுத்திய யாழ் தரப்பினர் போட்டியில் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றனர்.

கடந்தவார போட்டியில் புனித பேதுரு கல்லூரியை 2  – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற பதுரியா மத்திய கல்லூரி அணியினை எதிர்த்து கடந்தபோட்டியில்  ஹமீட் அல் ஹுசைனி கல்லூரிக்கு எதிராக 1 – 1 என சமநிலையில்நிறைவு செய்த புனித ஹென்றியரசர் கல்லூரியினர் மோதியிருந்தனர்.

பங்களாதேஷிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டது இலங்கை

இலங்கைக்கு எதிரான பங்கபந்து தங்கக்….

போட்டியின் ஆரம்ப நிமிடத்திலிருந்து பதுரியாவின் கோல் பரப்பினை ஆக்கிரமித்தனர் யாழ் வீரர்கள். பிரசாந்த், ஜோசப் ஜோடி தொடர்ந்தும் பதுரியாஅணியின் கோல் பரப்பில் அழுத்தத்தினை பிரயோகித்த போதும் சிறந்த நிறைவினை பெறவில்லை.

40 ஆவது நிமிடத்தில் ஜோசப் உட்செலுத்திய பந்தை பிரசாந்த் ஹெடர் மூலம்கோலாக மாற்ற ஹென்றியரசர் கல்லூரி முதலாவது கோலை பதிவு செய்தது.

முதல் பாதி – புனித ஹென்றியரசர் கல்லூரி 1 – 0   பதுரியா மத்தியகல்லூரி

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் சற்று ஆட்டத்தினை வேகப்படுத்திய பதுரியா கல்லூரி பந்தை முன்னோக்கி நகர்த்திய போதும் கோல்பெறப்படவில்லை .

தொடர்ந்தும் பந்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹென்றியரசர் கல்லூரி70 ஆவது நிமிடத்தில் தனுசன் மூலமாக இரண்டாவது கோலைப் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து ஹென்றியரசர் கல்லூரிக்கு கோல் பெறுவதற்கான இலகுசந்தர்ப்பங்கள் கிடைத்த போதும், முன் கள வீரர்கள் சிறந்த நிறைவினைபெற்றுக்கொடுக்க தவறினர்.

முழு நேரம் – புனித ஹென்றியரசர் கல்லூரி 2 – 0  பதுரியா மத்திய கல்லூரி

கோல் பெற்றவர்கள்

  • புனித ஹென்றியரசர் கல்லூரி – பிரசாந்த் 40’, தனுசன் 70’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<