இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இரண்டாவது தடவையாக நடத்தும் பாடசாலைகளுக்கு இடையிலான ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி நடைபெறவுள்ளன.
கொழும்பு, குதிரைப்பந்தயத் திடல் அரங்கில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதியில் நடப்புச் சம்பியன் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணி, கொழும்பு புனித பேதுரு கல்லூரியை எதிர்கொள்ளவுள்ளது. தொடர்ந்து இரண்டாவது அரையிறுதியில் பலம்கொண்ட கொழும்பு ஸாஹிரா கல்லூரி வீரர்கள், யாழ்ப்பாணத்தின் முன்னிலை அணிகளில் ஒன்றாக உள்ள புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்களை எதிர்கொள்ளவுள்ளனர்.
புனித ஹென்றியரசரை வீழ்த்திய புனித ஜோசப் அரையிறுதியில்
Thepapare கால்பந்து சம்பியன்ஷிப்………….
கடந்த ஜனவரி மாதம் ஆரம்பமான இந்தத் தொடரில் நாடெங்கும் இருந்து 20 பாடசாலை அணிகள் போட்டியிட்ட நிலையில் தமது திறமையை வெளிப்படுத்திய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் நடப்புச் சம்பியன் பட்டத்தை புனித ஜோசப் தக்கவைத்துக் கொள்ளுமா, பலம்கொண்ட அணியான ஸாஹிரா கல்லூரி தனது பலத்தை நிரூபிக்குமா, தொடரில் கடுமையாகப் போராடி முன்னேறி வரும் புனித பேதுரு கல்லூரிக்கு போராட்டத்திற்கு பலன் கிடைக்குமா அல்லது பாடசாலை கால்பந்தில் அண்மைக்காலமாக சோபிக்கும் யாழ்பாணத்திற்கு கிண்ணம் கிட்டுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
புனித ஜோசப் கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி
- காலம் – 2020 பெப்ரவரி 19ஆம் திகதி
- மைதானம் – கொழும்பு, குதிரைப்பந்தயத் திடல் அரங்கு
- நேரம் – மலை 6.00 மணி
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முறை நடத்தப்பட்ட ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் மருதானை புனித ஜோசப் அணி நேர்த்தியான ஆட்டத்தை இறுதிப் போட்டிவரை வெளிப்படுத்தி கிண்ணத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியின் அந்த அணி ஹமீட் அல் ஹுஸைனி அணியை தோற்கடித்தது.
புனித ஜோசப் அணி இம்முறை தொடரிலும் அதே பலத்துடனேயே களமிறங்கியுள்ளது.
ஆரம்ப சுற்றி ஏ குழுவில் ஆடிய புனித ஜோசப் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு சமநிலை மற்றும் ஒரு தோல்வியுடன் அந்தக் குழுவில் முதலிடத்தை பெற்று காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டது. யாழ்ப்பாணத்தின் புனித ஹெண்றியரசர் கல்லூரிக்கு எதிராக அரையிறுதிப் போட்டியில் புனித ஜோசப் கல்லூரியின் ஆட்டத் திறனை முழுமையாக பார்க்க முடிந்தது.
முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் சரிக்கு சமமாக மோதிக்கொண்டபோதும் இரண்டாவது பாதியில் நேர்த்தியாக ஆடிய புனித ஜோசப் வீரர்கள் சிறப்பான கோல்களை பெற்று உறுதியான வெற்றியொன்றை பெற்றனர். அந்த அணியின் முன்களம் வலுவானது என்பது தெரிந்தது என்றபோதும் பின்கள வீரர்களும் அரணாக நின்று எதிரணி நுழைவதற்கு வழிவிடுவதில்லை.
Photos : St Patrick’s College,Jaffna vs Al Aqsa College,Kinniya | Quarterfinals | TPFC2019
ThePapare.com | Murugaiah Saravanan |10/2/2020 Editing and re-using images…………..
குறிப்பாக புனித ஜோசப் கோல்காப்பாளர்கலான தரூச ரஷ்மிக்க மற்றும் மார்ஷல் கொடிக்கார அகிய இருவரும் எதிரணி கோல் முயற்சிகளை முறியடிக்கும் திறன் மிக்கவர். அதேபோன்று அந்த அணியின் மத்திய கள வீரர்கள் நேர்த்தியாக பந்தை பரிமாற்றி கோல்களை பெற உதவுவதை கடந்த போட்டிகளில் பார்க்க முடிந்தது.
முன்களத்தை பொறுத்தவரை செனால் சந்தேஷ் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார். இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் முன்னாள் தலைவரான சந்தேஷ் அணிக்கு தேவைப்படும் நேரத்தில் கோல்பெறும் திறன் பெற்றவர்.
அதேபோன்று ஷலன ப்ரமன்த புனித ஜோசப் கல்லூரியின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க வீரர் ஆவர். எப்போது சந்தேசுக்கு துணையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் எதிரணி பின்களத்திற்கு எப்போதும் சவால் கொடுக்கக் கூடியவர்.
இந்தத் தொடரில் இதுவரை 8 கோல்களை பெற்று அதிக கோல் பெற்றவர்கள் வரிசையில் சந்தேஷ் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, புனித ஜோசப் கல்லூரி தனது நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் திறமையான வீரர்களை தன்னகத்தே கொண்டே அரையிறுதியில் களமிறங்கவுள்ளது.
மறுபுறம், இவர்களை எதிர்த்தாடவிருக்கும் புனித பேதுரு கல்லூரி ஆரம்ப சுற்றில் இருந்தே கடுமையாகப் போராடியே அரையிறுதி வரை முன்னேறியுள்ளது. டி குழுவில் அடிய அந்த அணி தனது மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு சமநிலை என ஒரு கோல் வித்தியாசத்திலேயே நெருக்கடியுடன் காலிறுதிக்கு முன்னேற முடிந்தது.
தோல்வியுறாத அணியாக அரையிறுதிக்கு நுழைந்த கொழும்பு ஸாஹிரா கல்லூரி
டி மெசனோட் கல்லூரிக்கு எதிரான……………
காலிறுதிப் போட்டியும் அந்த அணிக்கு இலகுவாக இருக்கவில்லை. யாழ். மத்திய கல்லூரி அணியை எதிர்கொண்ட புனித பேதுரு கல்லூரி ஆட்டத்தின் முதல்பாதியில் 3-2 என பின்தங்கியதோடு போட்டி முடிவதற்கு 10 நிமிடங்கள் இருக்கும் வரை 2 கோல் வித்தியாசத்தில் பின்னடைவையே சந்தித்தது.
எனினும், இறுதிப் பத்து நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து மூன்று கோல்களை பெற்றே புனித பேதுரு கல்லூரி அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.
புனித பேதுரு கல்லூரியை பொறுத்தவரை அந்த அணிக்கு இருக்கும் ஒரே நட்சத்திர வீரர் என்றால் அது சபீர் ரசூனியா ஆவார். இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி வீரரான அவரைச் சுற்றியே பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கல்லூரி செயற்பட்டு வருகிறது. இந்தத் தொடரில் ரசூனிய 5 கோல்களை பெற்றிருப்பதோடு அவரது ஆட்டத்திறன் புனித பேதுரு கல்லூரி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு மிக அவசியமாக உள்ளது.
முன்களம் மத்திய களம் என இரு இடங்களிலும் ஆடி அணிக்கு வலுப் பெற்றுக் கொடுத்த இவருக்கு பக்க பலமாக, மொஹமட் செயிட், இஹ்சான் மற்றும் மிரோன் கெலி ஆகியோர் அவசியமான வீரர்களாக உள்ளனர்.
>>இந்தப் போட்டியை நேரடியாகப் பார்வையிட<<
ஸாஹிரா கல்லூரி எதிர் புனித பத்திரிசியார் கல்லூரி
- காலம் – 2020 பெப்ரவரி 19ஆம் திகதி
- மைதானம் – கொழும்பு, குதிரைப்பந்தயத் திடல் அரங்கு
- நேரம் – மலை 3.30 மணி
ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் கடந்த முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிண்ணத்தை நோக்கி முன்னேறத் தவறிய கொழும்பு ஸாஹிரா கல்லூரி இம்முறை தொடரில் கச்சிதமாக ஆடி வருகிறது. திறமையான அணி, வலுவான ஆதரவாளர்கள் என்று அந்தக் கல்லூரி தனது அனைத்துப் போட்டிகளிலும் சோபித்தது.
சி குழுவில் ஆடிய ஸாஹிராக் கல்லூரி 4 குழுநிலைப் போட்டிகளிலும் வெற்றியீட்டியது. மொத்தம் 13 கோல்கள் பெற்ற அந்த அணி எதிரணிக்கு ஒரு கோலையே விட்டுக்கெடுத்தது. எனவே, எந்த நெருக்கடியும் இன்றி காலிறுதிக்கு முன்னேற முடிந்த கொழும்பு ஸாஹிரா அரையிறுதிக்கு முந்தைய போட்டியிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.
Photos : Zahira College v St. Benedict’s College | ThePapare Football Championship 2019
ThePapare.com | Hiran Weerakkody | 24/01/2020 | Editing and re-using images………….
கந்தானை டி மெசனோட் கல்லூரியை காலிறுதிப் போட்டியில் எதிர்கொண்ட கொழும் ஸாஹிரா கல்லூரி ஆரம்பத்திலேயே இரண்டு கோல்களை இலகுவாகப் பெற்றதோடு கடைசி நிமிடங்களில் மற்றொரு கோலை புகுத்தி வெற்றியீட்டியதோடு எதிரணிக்கு எந்த கோலையும் விட்டுக்கொடுக்கவில்லை.
பின்களத்தின் தற்காப்பு, மத்திய களத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் முன்களத்தின் ஆக்கிரமிப்பு என்று கொழும்பு ஸாஹிரா அனைத்து அணிகளுக்கும் நெருக்கடி கொடுக்கக் கூடிய வலுவான அணியாக உள்ளது.
ஹமட் ஆகிப், மொஹமட் சாஜித், மொஹமட் முஷ்பிர், ரசா ரூமி, அக்தர், சாஹில் அஹமட், கோல்காப்பளர் எம். சாகிர் என்று பதினொரு வீரர்களும் வலுவானவர்கள். பெரும்பாலும் எல்லோருக்கும் இளையோர் தேசிய அணியில் ஆடிய அனுபவம் உள்ளது. அதிலும் மொஹமட் ஆகிப் இந்தத் தொடரில் மொத்தம் 5 கோல்களை பெற்று அதிக கோல்கள் பெற்றவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
எனவே, கொழும்பு ஸாஹிரா கல்லூரி அதிக வெற்றி வாய்ப்புக் கொண்ட அணியாக இருந்தபோதும் அதனை எதிர்த்து போட்டியிடும் புனித பத்திரிசியார் கல்லூரியை குறைத்து மதிப்பிட முடியாது.
ரசூனியாவின் ஹெட்ரிக் கோலால் புனித பேதுரு அரையிறுதிக்கு முன்னேற்றம்
சபீர் ரசூனியாவின் ஹெட்ரிக்……………
இம்முறை ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் மூன்று யாழ்ப்பாணக் கல்லூரிகள் விளையாடியபோதும் புனித பத்திரிசியார் கல்லூரி மாத்திரமே அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.
பி குழுவில் 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் அந்த கல்லூரி பலமான அணியாக காலிறுதிக்கு முன்னேறியது. குறிப்பாக அந்த அணி ஆரம்ப சுற்றில் அதிகபட்சமாக 16 கோல்களை பெற்றதோடு எதிரணிக்கு 5 கோல்களையே விட்டுக்கொடுத்தது. அதாவது ஒரு போட்டியில் அந்த அணி சராசரியாக 4 கோல்கள் வீதம் பெற்றுள்ளது.
காலிறுதிப் போட்டியில் அல் அக்ஸா கல்லூரியை எதிர்கொண்ட புனித பத்திரிசியார் கல்லூரி 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று இலகுவாக அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.
அந்த அணியின் நாகேஸ்வரன் பவிராஜ் தொடரில் ஐந்து கோல்களை பெற்று அதிக கோல் பெற்றவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அதேபோன்று ரஜிகுமார் சான்தன், ஜோன் லோயஸ் ஆகியோரும் அந்த அணியின் குறிப்பிடத்தக்க வீரர்களாவர்.
நீண்ட காலம் கல்லூரிக்காகவும், கழக மட்டத்திலும் ஆடிய அனுபவம் பெற்ற சான்தன் எதிரணியின் பின்களத்திற்கு எந்நேரமும் அதிர்ச்சி கொடுக்கக்கூடிய வீரராக இருப்பார்.
கடந்த முறை ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் காலிறுதிப் போட்டியில் ரசிகர்களை இருக்கையில் இருந்து எழுந்து நிற்க வைத்த ஆட்டமாக இவ்விரு அணிகளும் மோதிக்கொண்டன. சமநிலையில் நிறைவடைந்த குறித்த போட்டியில் பெனால்டியில் யாழ் வீரர்கள் வெற்றியைத் தமதாக்கினர். எனவே, இம்முறையும் அதேபோன்றதொரு விறுவிறுப்பான ஆட்டத்தையே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
>>இந்தப் போட்டியை நேரடியாகப் பார்வையிட<<