சபீர் ரசூனியாவின் ஹெட்ரிக் கோலின் உதவியோடு யாழ் மத்திய கல்லூரிக்கு எதிரான Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது காலிறுதிப் போட்டியில் 6-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டிய புனித பேதுரு கல்லூரி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் கடைசி நிமிடம் வரை விறுவிறுப்புத் தந்த இந்த ஆட்டத்தின் இறுதி பத்து நிமிடங்களில் புனித பேதுரு கல்லூரி மூன்று கோல்களை புகுத்தி தனது வெற்றியை உறுதி செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ThePapare கால்பந்து சம்பியன்ஷிப்: காலிறுதியில் மோதும் அணிகள்
இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com…
பெத்தகான கால்பந்து அரங்கில் இன்று (07) நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய யாழ் மத்திய கல்லூரி, எதிரணி கோல் பகுதியை ஆக்கிரமித்தது. 5ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியன் பெர்னான்ட் புனித பேதுரு கல்லூரியின் வலையை நோக்கி நேராக உதைக்க அது அந்த அணியின் கோல்காப்பாளரின் கைகளுக்குச் சென்றது.
எனினும் ஒரு நிமிடம் கழித்து செயற்பட்ட யாழ் மத்திய கல்லூரி போட்டியின் முதல் கோலை புகுத்தியது. உயரவந்த பந்தை கே. ஜேசுராஜன் தாவி தலையால் முட்டி கோலாக மாற்றினார். தொடர்ந்து யாழ். மத்திய கல்லூரி அணி பந்தை நேர்த்தியாக பரிமாற்றி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வந்தது.
இந்நிலையில் புனித பேதுரு கல்லூரியின் கோல் இயந்திரமான சபீர் ரசூனியா யாழ். மத்திய கல்லுரியின் இரு பின்கள வீரர்களை முறியடித்து நெருக்கமான தூரத்தில் இருந்து பதில் கோல் திருப்பினார்.
இதனால் போட்டியின் பரபரப்பு மேலும் அதிகரித்தது. மீண்டும் செயற்பட்ட ரசூனியா 26 ஆவது நிமிடத்தில் பரிமாற்றிய பந்தை இடது பக்க மூலையில் இருந்து பெற்ற மொஹமட் செயிட் வலது காலால் வேகமாக உதைத்து வலைக்குள் செலுத்த புனித பேதுரு கல்லூரி முன்னிலை பெற்றது.
எனினும் நேர்த்தியான ஆட்டம் மற்றும் சிறந்த தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய யாழ் மத்திய கல்லூரி, எதிரணியின் கோல் வாய்ப்புகள் சிலவற்றை தடுத்ததோடு தமக்கான கோல் வாய்ப்புகளையும் உருவாக்கத் தவறவில்லை.
30 ஆவது நிமிடத்தில் புனித பேதுரு கல்லூரியின் பின்களத்தின் தவறை பயன்படுத்தி விஜேகுமார் விக்னேஷ் யாழ். மத்திய கல்லூரி சார்பில் கோல் பெற்று போட்டியை சமநிலைக்குக் கொண்டுவந்தார். இதன்போது புனித பேதுரு கல்லுரியின் கோல்காப்பாளர் கோல் பகுதியில் விட்ட இடைவெளியை பயன்படுத்தி பட்டு வந்த பந்தையே அவர் வலைக்குள் செலுத்தினார்.
போட்டியின் முதல் பாதி முடிவதற்கு இரண்டு நிமிடங்கள் மாத்திரமே இருக்கும்போது புனித பேதுரு கல்லூரியின் பின்களத்தில் நீடித்த பலவீனத்தை பயன்படுத்தி ஜேசுராஜ் பரிமாற்றிய பந்தை விந்துஜன் எந்த நெருக்கடியும் இன்றி கோலாக மாற்றினார்.
இளம் வீரரால் பார்சிலோனா வெற்றி: தொடரும் ரொனால்டோவின் அசத்தல்
இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சீரி A தொடர்களின் முக்கிய சில…
இதன் மூலம் மொத்தம் ஐந்து கோல்கள் பெறப்பட்ட முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோல் வித்தியாசத்தில் யாழ் மத்திய கல்லூரியினால் முன்னிலை பெற முடிந்தது.
முதல் பாதி: யாழ் மத்திய கல்லூரி 3 – 2 புனித பேதுரு கல்லூரிm
இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்தில் யாழ். மத்திய கல்லூரிக்கு பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. எதிரணி கோல் கம்பத்திற்கு நெருக்கமான தூரத்தில் இருந்து விந்துஜனிடம் கிடைக்க அவர் உதைத்த பந்து பட்டும்படாமலும் வெளியேறிது.
இந்நிலையில் பதில் கோல் திருப்ப தாக்குதல் ஆட்டம் ஒன்றுக்குத் திரும்பிய புனித பேதுரு கல்லூரிக்கு 52 ஆவது நிமிடத்தில் பெனால்டி பெட்டிக்கு அருகில் வைத்து ப்ரீ கிக் வாய்ப்பு ஒன்று கிட்டியது. எனினும் சபீர் ரசூனியா உதைத்த பந்து நேராக கோல்காப்பளரின் கைகளுக்குச் சென்றது.
தொடர்ந்து எதிரணி கோல் எல்லையை ஆக்கிரமித்த புனித பேதுரு கல்லூரி சார்பில் டானியல் மக்ரத் உதைத்த பந்தை யாழ். மத்திய கல்லூரி கோல் காப்பாளர் ஜூட் டிபின்சன் பாய்ந்து அபாரமாகத் தடுத்தார்.
எனினும் யாழ். மத்திய கல்லூரி 77 ஆவது நிமிடத்தில் விந்துஜன் மூலம் தனது நான்காவது கோலை பெற்று 2 கோல்கள் இடைவெளியுடன் முன்னிலை பெற்றது. இதன்போது அவர் கோல் கம்பத்திற்கு நெருக்கமாக இருந்து எதிரணி கோல்காப்பாளர் சுதாகரிப்பதற்குள் பந்தை வலைக்குள் செலுத்தினார்.
போட்டியின கடைசி பத்து நிமிடங்களில் 2 கோல்கள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்த புனித பேதுரு கல்லூரிக்கு 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை தேசிய அணியின் தலைவர் சபீர் ரசூனியா தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
80ஆவது நிமிடத்தில் கிடைத்த கோனர் கிக்கை பயன்படுத்தி பந்தை தலையால் முட்டி கோல் பெற்றார். மீண்டும் செயற்பட்ட ரசூனியா யாழ் மத்திய கல்லுரி பின்கள வீரர்களை முறியடித்து பந்தை மொஹமட் செயிட் இடம் கொடுக்க அவர் அதனை வலைக்குள் செலுத்தினார். இதன் மூலம் கோல் எண்ணிக்கை 4-4 என சமநிலைக்கு வந்தது.
போட்டியின் முழுநேரம் முடிவதற்கு 3 நிமிடங்களே இருக்கும்போது ரியாஸ் உஸைன் வழங்கிய பந்தை ரசூனியா மின்னல் வேகத்தில் உதைக்க எதிரணி கோல்காப்பாளருக்கு பிடிக்க முடியாமல் அது கோலாக மாறியது. ரசூனியா தனது ஹெட்ரிக் கோலை பெறும்போது புனித பேதுரு கல்லூரி போட்டியில் வெற்றியை நெருங்கியது.
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சஷிகலா சிறிவர்தன ஓய்வு
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியும், சிரேஷ்ட…
இந்நிலையில் போட்டியின் மேலதிக நேரத்தில் ஆரிப் உஸைன் நிதானமாகவும் நேர்த்தியாகவும் புனித பேதுரு கல்லூரிக்காக 6ஆவது கோலை பெற்று அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
Thepapare கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதிப் போட்டி நாளை (08) பெத்தகான மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி, டி மெசனோட் கல்லூரியை எதிர்கொள்ளவுள்ளது.
முதல் பாதி: யாழ் மத்திய கல்லூரி 4 – 6 புனித பேதுரு கல்லூரி
கோல் பெற்றவர்கள் –
- யாழ் மத்திய கல்லூரி – கே. ஜேசுராஜ் 6’, விஜேகுமார் விக்னேஷ் 30’, விந்துஜன் 43’ & 77’
- புனித பேதுரு கல்லூரி – சபீர் ரசூனியா 9’, 80’ & 87’ மொஹமட் செயிட் 26’ & 83’, ஆரிப் உஸைன் 90+1’
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<