[socialpoll id=”2516535″]
இங்கிலாந்து பிரீமியர் லீக் (EPL) தொடரின் இரண்டாவது வாரத்தின் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் ThePapare.com ரசிகர்களான உங்களுக்கு வாரத்தின் சிறந்த வீரருக்காக வாக்களிக்க முடியும்.
அதற்காக இரண்டாவது வாரத்தில் பிரகாசித்த சில வீரர்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.
சலாஹ்வின் பெனால்டி சர்ச்சையுடன் வெற்றி பெற்ற லிவர்பூல்
கிறிஸ்டல் பெளஸ் கால்பந்து அணியை 2-0 என்ற கோல்கள் …
செர்ஜியோ அகுவேரோ (மன்செஸ்டர் சிட்டி)
மன்செஸ்டர் சிட்டி அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஹட்டர்ஸ்பீல்ட் அணிக்கு எதிரான போட்டியில் செர்ஜியோ அகுவேரோ ஹட்ரிக் கோல் பெற்ற பின், அவரை சிறந்த நிலையில் பார்ப்பதாக சிட்டி முகாமையாளர் பெப் கார்டியோலா கூறியிருந்தார்.
போட்டியின் முதல் பாதியில் ஒரு கோலை பெற்ற அகுவேரோ இரண்டாவது பாதியில் மேலும் இரண்டு கோல்களை புகுத்தி தனது கால்பந்து வாழ்வில் 13ஆவது ஹட்ரிக் கோலை பூர்த்தி செய்தார். இதில் அவரது ஒன்பது ஹட்ரிக் கோல்கள் பிரீமியர் லீக்கில் பெற்றவையாகும். இந்த தொடரில் 11 ஹட்ரிக் கோல்களை பெற்றிருக்கும் அலன் ஷீரருக்கு அடுத்ததாக இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஆர்சனலுக்கு எதிரான போட்டியில் மார்கோஸ் அலொன்சோ கடைசி நேரத்தில் புகுத்திய கோலே செல்சி அணிக்கு 3-2 என வெற்றியை தேடித்தந்தது. ஆரம்பத்தில் செல்சி இரட்டை கோல்கள் பெற்று முன்னிலையை அடைந்தபோது ஆர்சனல் பதில் கோல்கள் திருப்பியதால் இழுபறி ஏற்பட்டிருந்தது. ஸ்பெயினின் அலொன்சோ தீர்க்கமான கோலை பெற்றது மாத்திரமன்றி அந்த போட்டியில் செல்சி அணி முதல் கோலை பெறுவதற்கும் உதவினார்.
யுனைடெட் அணி அதிர்ச்சித் தோல்வி: சிட்டிக்கு இலகு வெற்றி
இங்லாந்து பிரீமியர் லீக் தொடரில் ஞாயிற்றுக்கிழமை …
விர்ஜில் வான் டிஜிக் (லிவர்பூல்)
திங்கட்கிழமை நடைபெற்ற ஒரே போட்டியில் கிறிஸ்டல் பெலஸுக்கு எதிராக லிவர்பூல் 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் உறுதியான வெற்றி ஒன்றை பெற்றது. லிவர்பூல் அணிக்காக பின்களத்தில் அபாரமாகச் செயற்பட்ட விர்ஜில் வான் டிஜிக், போட்டியில் அதிகபட்சமாக எட்டுத் தடவை வலையை நோக்கிச் செல்லும் பந்தை வெளியே தட்டிவிட்டார். அவர் தனது 79 பந்து பரிமாற்றங்களில் 73 ஐ வெற்றிகரமாக பூர்த்தி செய்தார்.
அணித்தலைவரான ட்ரோய் டீனி தனது அணிக்காக களைப்பின்றி ஆடி, அன்ரே கிரே முதல் கோலை பெற உதவினார். தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்திற்கு பின் வட்போர்ட் அணிக்காக தனது முதல் கோலையும் பெற்றார். பர்ன்லி அணியை 3-1 என வீழ்த்திய வட்போர்ட் தற்போது பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி உற்சாகத்துடன் உள்ளது.
நீல் ஈதரிட்ஜ் (கார்டிப் சிட்டி)
கார்டிப் சிட்டியின் கோல்காப்பாளர் நீல் ஈதரிட்ஜ் 10 வீரர்களுடன் ஆடிய நியூகாஸ்ல் யுனைடெட்டின் கென்னடி உதைத்த பெனால்டியை கோல் புகாமல் தடுத்தார். இதன்மூலம் புதிதாக பிரீமியர் லீக்கிற்கு உயர்வுபெற்ற கார்டிப் சிட்டி முதல் புள்ளியை பெற்றுக்கொண்டது. இந்த பருவத்தில் பெனால்டி தடுக்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பமாக இது இருந்தது. இதனால் இரு அணிகளுக்கும் கோலின்றி புள்ளிகளை பகிர்ந்து கொள்ள வேண்டி ஏற்பட்டது.
ThePapare.com இன் பிரீமியர் லீக் வாரத்தின் சிறந்த வீரர் (2) – செர்ஜியோ அகுவேரோ
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…