இலங்கையின் முதல் தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஆனது, அதனது விரிவான சேவைகளுடன் தனது 10 ஆவது அகவையில் கால்தடம் பதித்துள்ளது.
இலங்கையில் இடம்பெறும் முக்கிய விளையாட்டுக்களை உயர்தரத்துடன் நேரலை (Live Streaming) செய்யும் இந்த விளையாட்டு இணையத்தளம் விளையாட்டு தொடர்பான தகவல்களையும், செய்திகளையும் உடனுக்குடன் வழங்குவதுடன், அழகான 32 புகைப்படத் தொகுப்புக்களையும் தருகின்றது.
மேலும் ஆழமான ஆய்வுகளுடன் கூடிய பல்வேறு கட்டுரைத் தொகுப்புக்களையும் வழங்கும் இந்த விளையாட்டு இணையத்தளம் இலங்கையின் விளையாட்டு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விளையாட்டு ஊடகமாக திகழ்கிறது.
இறுதி நிமிட அபாரத்தினால் ரினௌனை வீழ்த்தியது சோண்டர்ஸ்
இரண்டு பாடசாலை மாணவர்களின் எண்ணக்கருவோடும் ஒரு மடிக்கணணியுடனும் ஒரு வீடியோ கெமராவோடும் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டு இணையத்தளம், தற்போது 50 இற்கு மேற்பட்ட வீடியோ கெமரா, மடிக்கணணி தொகுதிகளை கொண்டிருப்பதுடன் நாடு பூராகவும் இருந்து இயங்கும் 150 இற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டும் காணப்படுகின்றது. தற்போது இந்த விளையாட்டு இணையத்தளம் 30 இற்கும் மேற்பட்ட பல்வேறு விளையாட்டுக்களை அதனது ரசிகர்களுக்காக அஞ்சல் (Cover) செய்து தருவது குறிப்பிடத்தக்கது.
கடல் கடந்த ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் விளையாட்டு நிகழ்வுகளை அஞ்சல் செய்யும் அளவிற்கு தற்போது பரந்த வலையமைப்பை கொண்டிருக்கும் இந்த விளையாட்டு இணையத்தளம் வெளிநாடுகளிலுள்ள இலங்கை ரசிகர்களது ஜனரஞ்சகமான விளையாட்டு ஊடகமாகவும் திகழ்கிறது.
எமது இணையத்தளத்தின் வளர்ச்சிக்கு ரசிகர்களின் பங்களிப்பே பிரதான காரணமாகும். உங்களது ஆதரவே, எங்களுக்கு ஆர்வத்துடன் செயற்படுவதற்கான ஊக்கத்தையும், உத்வேகத்தினையும் அளிக்கின்றது.
நாம் எங்களது 10 ஆவது அகவையிலும் மதிப்புற்குரிய ரசிகர்களாகிய உங்களது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி உங்களுடன் தொடர்ந்தும் தொடர்புகளை பேண ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
எனவே, நீங்கள் எங்களுடன் தொடர்ந்தும் உங்களது தொடர்புகளை பேணி, எங்களது தவறுகளை சுட்டிக்காட்டி எங்களுக்கு தொடர்ந்தும் ஊக்கம் தருமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
நன்றிகள்.
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<