இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி சோபித்து வருகின்றபோதும் காலநிலை ஏமாற்றத்தைத் தருவதாக அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் ஜுர்கென்சன் தெரிவித்தார்.
கொழும்பு, பி. சரா ஓவல் மைதானத்தில் நேற்று (22) ஆரம்பமான போட்டியின் இரண்டு நாட்கள் முடிவுற்றபோதும் மழை காரணமாக மொத்தம் 66 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டுள்ளன. முதலில் துடுப்பொடுத்தாடும் இலங்கை அணி 144 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
“துரதிர்ஷ்டவசமாக காலநிலையை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. அடுத்த மூன்று நாட்களும் நீண்ட போட்டியாக அமைந்து முடிவொன்றை பெற எதிர்பார்க்கிறோம். மழை சற்று ஏமாற்றத்தை தருகிறது. என்றாலும் சிறந்த முடிவொன்றை பெற நாம் முயற்சிப்போம்” என்று இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் பின் ஜுர்கென்சன் குறிப்பிட்டார்.
சீரற்ற காலநிலையால் கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு….
இந்தப் போட்டியில் டிரென்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவர் நியூசிலாந்து அணிக்காக 250 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரராக மாறியுள்ளார். இதற்கு முன்னர் ரிச்சட் ஹெட்லி (431) மற்றும் டானியல் விட்டோரி (361) இந்த மைல்கல்லை எட்டி இருந்தனர்.
“இன்று டிரன்டுக்கு முக்கிய நாளாகும். நியூசிலாந்துக்காக மூன்றாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக அவர் உள்ளார். அவர் எமது அணிக்கு உற்சாகம், சக்தியை தருகிறார். பயிற்சிகளின்போதும் அதிக உற்சாகத்துடன் செயற்படுபவராக அவர் உள்ளார்.
அவரது திறமை மற்றும் வெளிப்பாடுதான் மிக முக்கியமானது. கடந்த பல ஆண்டுகளாக அவர் அணிக்கு அளித்துவரும் பங்களிப்பு அபாரமானதாகும்.
அவர் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் என்பதை நீண்ட காலத்திற்கு முன் நிரூபித்துள்ளார். தனக்கு கிடைக்கின்ற எந்த ஒரு ஆடுகளத்திலும் அவர் தனது திறமையை வெளிப்படுத்துகிறார். போட்டியின் எந்த ஒரு நேரத்திலும் அவரால் பந்துவீச முடியும் என்று நான் நினைக்கிறேன். அது மிக முக்கியமானதாகும். எந்த ஒரு நேரத்திலும் பொருந்துகின்றவராக அவர் உள்ளார்” என்று நியூசிலாந்து பந்துவீச்சு பயிற்சியாளர் குறிப்பிட்டார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<