இலங்கை கிரிக்கெட் அணியானது தனக்காக சாதிக்க கூடிய கதாநாயகர்கள் (Heroes) பலரை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றது. அந்த வகையில், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் விளையாடாமல் இலங்கை அணிக்கு மறைமுக கதாநாயகனாக மாறிய வீரர் ஒருவரின் கதை ThePapare.com இன் செய்தியாளர்களுக்கு கிடைத்திருக்கின்றது.
இறுதிப் போட்டியை சாதனை வெற்றியாக மாற்றிய இலங்கை அணி
இங்கிலாந்து அணிக்கு எதிராக கொழும்பு ஆர்.பிரேமதாஸ ……
இலங்கை அணி தொடர் தோல்விகளை கண்டதனால் என்னவோ? இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது ஒருநாள் போட்டி நடைபெற்ற கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் இரசிகர்களை காண்பது மிகவும் அரிதாகவே இருந்தது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலகில் எந்த மூலைக்குச் சென்று கிரிக்கெட் ஆடிய போதிலும் அவர்களுக்கு அங்கு சென்று ஆதரவுதர காத்திருக்கும் “பார்மி ஆர்மி” குழுவின் இரசிகர்களும், பாடசாலை மாணவர்களும் கொஞ்சம் இலங்கை இரசிகர்களுமே குறித்த போட்டியில் பார்வையாளர்களாக வீற்றிருந்தனர். இத்தருணத்தில், இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் முதலாவது தண்ணீர் இடைவேளை கொடுக்கப்படுகின்றது.
குறித்த தண்ணீர் இடைவேளையில் இலங்கை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் மைதானத்திற்குள் வருகின்றார். பொதுவாகவே, அவரது பந்துவீச்சினை எதிர்கொள்ள அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் பயப்படுவர். கொஞ்சம் அசந்து போனால் எவ்வளவு பெரிய துடுப்பாட்ட வீரராக இருந்தாலும் குறித்த வீரரை எதிர்கொள்ளும் போது ஆட்டமிழந்து ஓய்வறைக்கு நடையைக் கட்ட வேண்டியதுதான்.
ஆனால், இந்த தடவை குறித்த அந்த வீரர் மைதானத்திற்குள் விளையாட வருகை தரவில்லை. பிரத்தியேக வீரர்களுக்கான மேலங்கியை அணிந்து கொண்டு வேறு ஒரு வேலைக்காகவே மைதானத்திற்குள் வந்தார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்ட வேகப்புயல் லசித் மாலிங்கவே பிரத்தியேக வீரருக்கான மேலங்கியுடன் மைதானத்திற்குள் நுழைந்தவர். போட்டியில் விளையாடாத மாலிங்கவின் பொறுப்பு, களத்தில் ஆடிக்கொண்டிருக்கும் இலங்கை அணியின் வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதாக இருந்தது.
ஜிம்பாப்வேயை மீண்டும் இலகுவாக வீழ்த்திய பங்களாதேஷ் தொடர் வெற்றி
ஆரம்ப வீரர்களான இம்ருல் கைஸ் மற்றும் லிட்டோன் தாஸின் சதத்தை …..
மாலிங்க அரங்கு நுழையும் போது இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களாக வந்த சதீர சமரவிக்ரம – நிரோஷன் திக்வெல்ல ஜோடி இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் முதல் பவர் பிளே ஓவர்களில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்கு 2018ஆம் ஆண்டு பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டத்தையும் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில் மைதானத்திற்குள் நுழைந்த லசித் மாலிங்க வீரர்களுக்கு தாகத்திற்கான தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தண்ணீர் பகிர்ந்ததோடு மட்டுமின்றி வீரர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். இந்த கதை தண்ணீர் போத்தல்கள் எடுத்து வரும் மேலதிக வீரராக மாலிங்க இருந்தது பற்றி குறிப்பிடுவது அல்ல.
குறித்த போட்டியில் இலங்கை அணியின் ஓய்வறை அமில அபொன்சோ, நுவான் பிரதீப், திமுத் கருணாரத்ன போன்றோரினால் நிரம்பி இருந்த போதிலும் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான லசித் மாலிங்கவே கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் சாதாரணமாக ஓடிச் சென்று களத்தில் ஆடும் வீரர்களுக்கு எது தேவையாக இருக்கின்றது என்பதனை பார்த்து அதனை செய்து கொடுப்பதில் முன்னின்று செயற்பட்டார்.
மாலிங்க மட்டும் இப்படியான வேலைகளை குறித்த போட்டியில் செய்யவில்லை. இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ஓய்வு எடுத்துக்கொண்ட இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கனும் இதே மாதிரி வேலை ஒன்றினை செய்தார். ஆனால் மாலிங்கவைப் போன்று அல்ல.
கடந்த காலங்களில் பிரபல ரக்பி வீரரான டான் கார்ட்டர் தனது அணிக்கு இப்படியான உதவிகளை வழங்கியதோடு, இந்திய அணியின் தலைவரான மஹேந்திர சிங் டோனியும் தனது அணிக்கு ஒரு நாள் போட்டியொன்றில் அதேமாதிரியான வேலையினை செய்திருந்தார். ஆனால், மாலிங்க இங்கிலாந்து அணியுடனான போட்டியில் செய்த வேலைகள் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
ஜிம்பாப்வேயை மீண்டும் இலகுவாக வீழ்த்திய பங்களாதேஷ் தொடர் வெற்றி
ஆரம்ப வீரர்களான இம்ருல் கைஸ் மற்றும் லிட்டோன் தாஸின் சதத்தை நெருங்கிய …..
இலங்கை மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போட்டியினை காண்பதற்கு போதியளவான இரசிகர்கள் பட்டாளம் வராமல் போயிருந்தது ஒரு கவலையான விடயமாகும். குறித்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி 366 ஓட்டங்களை அதிரடியான முறையில் பெற்றது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை தொடர்ந்து அடுத்த 20 நிமிடங்களில் இலங்கை அணியின் வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு பந்துவீசுவதற்கான பயிற்சிகளில் தம்மை தயார்படுத்திக் கொண்டு இருந்தனர்.
அதன்படி, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக வாய்ப்பு வழங்கப்பட்ட துஷ்மந்த சமீர, கசுன் ராஜித ஆகியோர் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரான ருமேஷ் ரத்னாயக்கவிடம் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். இந்த நேரத்திலும் கூட லசித் மாலிங்க ஓய்வறையில் இருக்கவில்லை. இந்த பயிற்சிகளிலும் கலந்து கொள்ள வந்திருந்த அவர் கசுன் ராஜிதவிற்கு இடையூறாக இருந்த இறப்பர் குற்றி ஒன்றினை அகற்றி இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளருக்கு பயிற்சிகளை சிறப்பாக மேற்கொள்ள வழிவகைகள் செய்தார்.
இதனை அடுத்து ராஜிதவிடம் சென்ற மாலிங்க, விசேடமான கை அசைவுகளை அவருக்கு கற்றுக்கொடுத்து தொடர்ந்தும் உதவிகளை வழங்கினார். சிறிது நேரத்தில் ராஜித மாலிங்கவிடம் இருந்து பெற்றுக் கொண்ட விடயங்கள் அவர் வீசிய மெதுவான பந்து ஒன்றின் மூலம் அனைவருக்கும் விளங்கியது. தொடர்ந்து இருவரும் பயிற்சிகளை மேற்கொண்ட காரணத்தினால், குறித்த பயிற்சி இடைவெளி சிறிது நேரம் நீண்டதுடன் பார்வையாளர் ஒருவர் “ இவர் நிறைய பந்துகள் வீசி விட்டார் இவருக்கு போட்டியில் விளையாடுவதற்கான தெம்பு இருக்குமா? “ என்று கூட ராஜிதவை நோக்கி சத்தம் போட்டிருந்தார். எனினும், மாலிங்க முழு நேரமும் மிகவும் உற்சாகத்துடன் இருந்து ராஜிதவுக்கு பயிற்சி வழங்கினார்.
பங்களாதேஷ் இளையோர் அணியை சுழலால் மிரட்டிய அஷான், ரொஹான் ஜோடி
சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 …
பின்னர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தின் போது வீசப்பட்ட முதல் ஓவரிலேயே அவ்வணியின் மிகவும் அபாயகரமான துடுப்பாட்ட வீரரான ஜேசன் ரோய் ராஜிதவின் அபார பந்து வீச்சில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார். இதனை லசித் மாலிங்க பைன் லெக் பெளண்டரி திசையில் இருந்து தண்ணீர் போத்தல்களை தன்னுடன் வைத்து நின்றவாறு பாராட்டினார்.
தொடர்ந்து அடுத்த ஓவரினை வீசிய துஷ்மந்த சமீரவினால் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் வேல்ஸ் ஆகியோர் மிகவும் துரிதகதியிலேயே ஓய்வறை நடந்தனர். இதனையும் மைதானத்தை சுற்றி வலம்வந்த லசித் மாலிங்க பாராட்டியதோடு நல்ல வரவேற்பு ஒன்றினையும் சமீரவுக்கு வழங்கினார்.
மாலிங்கவிடம் இருந்த சுயாதீன தன்மையே இப்போது முன்னுதாரணமான ஒருவராக அவரை மாற்றியுள்ளது. மாலிங்க விளையாடுவதை பார்ப்பது பொதுவாகவே ஒரு சந்தோசமான விடயம். இம்முறை அவர் பிரத்தியேக வீரர்களுக்கு கொடுக்கப்படும் மேலங்கியினை அணியவில்லை. அதனை தன்னுடைய கழுத்தில் சுற்றி தண்ணீர்ப் போத்தல்களை துணி ஒன்றில் போட்டு மைதானத்திற்குள் வெகு சாதாரணமாக நடந்து வந்தார்.
இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டொக்ஸினை நோக்கி எட்டாவது ஓவர் கசுன் ராஜிதவினால் வீசப்படுகின்றது. மைதானத்திற்கு வெளியே தண்ணீர்ப் போத்தல்களுடன் சில சொற்களையும் தன்னுடன் சேர்த்து மாலிங்க நிற்கின்றார்.
பின்னர் ஒன்பதாவது ஓவரில் இங்கிலாந்து அணியின் உடற்பயிற்சி ஆலோசகர் உபாதை ஒன்றினை எதிர்நோக்கிய பென் ஸ்டோக்ஸின் நிலை என்ன என்பதை அறிய வருகின்றார். அப்போது, இலங்கை அணியின் தலைவரான தினேஷ் சந்திமால் ஒரு தண்ணீர் இடைவெளிக்கு அழைப்பு கொடுக்கின்றார். இப்போது வேகமாக மைதானத்திற்குள் நுழைந்த மாலிங்க மிக வேகமான அறிவுரை ஒன்றினை வழங்கியவாறு வெளியேறுகின்றார்.
பின்னர் போட்டி நடுவர்கள் 16ஆவது ஓவரில் இடைவேளை ஒன்றினை அறிவித்த போது நுவான் பிரதீப் அணிக்கான தண்ணீரினையும், துடைக்கும் துணியினையும் எடுத்துக்கொண்டு ஓடி வருகின்றார். ஆனால், மூன்று தண்ணீர் போத்தல்களுடன் மாலிங்க மெதுவாக அரங்கில் குழுமியிருந்த இலங்கை வீரர்களை சந்தித்து பேசுகின்றார். இங்கேயும் தண்ணீர் கொடுப்பதற்காக மட்டும் மாலிங்க வரவில்லை.
இலங்கை அணி உருவாக்கிய மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரும், T20 சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்களில் இரண்டாம் இடத்தில் இருப்பவருமான மாலிங்க, போட்டியின் 22ஆவது ஓவரில் அகில தனன்ஜய விக்கெட்டினை கைப்பற்றிய பின்னர் தண்ணீர் போத்தல்களுடன் களத்திற்குள் வரவில்லை. ஏனெனில் இங்கிலாந்து அணியின் இறுதி நம்பிக்கையாக இருந்த பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டும் போய்விட்டது. அதோடு, போட்டியில் 20 ஓவர்கள் நிறைவடைந்த காரணத்தினால் டக்வத் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி பெற வேண்டிய ஓட்டங்களும் எகிறிவிட்டது. அதாவது, இலங்கை அணியின் வெற்றி ஊர்ஜிதமாக்கப்பட்டுவிட்டது. இதன் பின்னர் எதற்கு மாலிங்க வரவேண்டும்? அவரது வேலைதான் முடிவடைந்து விட்டதே.
Photos: Sri Lanka vs England | 5th ODI
ThePapare.com | Viraj Kothalawala | 23/10/2018 Editing ….
மாலிங்க தண்ணீர் போத்தல்களை தூக்கி வருவதை எதிர்பார்த்து இலங்கை அணியின் இரசிகர்கள் மைதானத்திற்கு வரவில்லை. அவரது துல்லியமான யோக்கர்கள் மூலம் விக்கெட்டுக்கள் சாய்க்கப்படுவதைப் பார்க்கவே அவர்கள் வந்திருந்தனர். எனினும், மாலிங்க போட்டியில் விளையாடாமல் போனாலும் அவரது சொந்த அணி தோல்வியினை சந்திப்பதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டார் அல்லவா? இதனாலேயே போட்டியில் விளையாடாத போதிலும் மாலிங்க தனது அணிக்கு தண்ணீர் போத்தல்களுடன் வந்து ஆலோசனைகள் வழங்கி உதவினார்.
மாலிங்க மைதானத்திற்குள் வந்தது தனது அணி வீரர்களுக்கு நீர் தேவையை தீர்க்க அல்லவே. இருண்ட நாட்களை சந்தித்துக்கொண்டு வந்த இலங்கை கிரிக்கெட் அணி 366 ஓட்டங்கள் விளாசி அசத்திய நாள் அது. அந்த நாளில், தான் விளையாடாத போதிலும் தனது அணி வெற்றியினை சுவைக்க வேண்டும் என்கிற அவாவே மாலிங்கவுக்கு இருந்தது. போட்டியில் விளையாடாத போதிலும் உண்மையில் மாலிங்க தனது அனுபவத்தின் மூலம் தனது அணிக்கு உதவினார்.
இலங்கை அணியில் பெரிதும் விமர்சிக்கப்பட்ட வீரர்களில் ஒருவராக லசித் மாலிங்க இருந்த போதும் தாய்நாட்டு சீருடை அணிந்தால் அவர் தன்னால் எந்தளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு அணியின் வெற்றிக்கு உழைப்பார் என்பதே உண்மை. இதுதான் அவரை இன்று, உலகம் போற்றும் ஒரு சிறந்த வீரராகவும் மாற்றியிருக்கின்றது.
>>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<<