லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) பிளே-ஓஃப் சுற்று போட்டிகள் நடைபெறும் நேரங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஏற்கனவே, முதல் போட்டி பிற்பகல் 03.00 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 07.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, லீக் போட்டிகள் அனைத்தும் இந்த நேர அட்டவணையின் கீழ் நடத்தப்பட்டிருந்தன.
பிளேஒப் சுற்றுக்கு செல்லும் நான்காவது அணியாக கொழும்பு ஸ்டார்ஸ்
எனினும், லீக் போட்டிகள் நிறைவடைந்தவுடன், பிளே-ஓஃப் போட்டிகள் கொழும்பிலிருந்து, ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்துக்கு மாற்றப்பட்டிருந்தன. இந்தநிலையில், அங்கு நடைபெறவுள்ள பிளே-ஓஃப் போட்டிகளுக்கான நேரத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, நாளைய தினம் (19) நடைபெறவுள்ள முதல் குவாலிபையர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகளுக்கான நேர அட்டவணையில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் எலிமினேட்டர் போட்டி, பிற்பகல் 04.00 மணிக்கும், இரண்டாவதாக நடைபெறவுள்ள முதல் குவாலிபையர் போட்டி இரவு 08.30 இற்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எலிமினேட்டர் போட்டியில் தம்புள்ள ஜயண்ட்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரண்டாவதாக நடைபெறவுள்ள குவாலிபையர் போட்டியில், ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<