இலங்கை கிரிக்கெட் அணி 2022ம் ஆண்டு விளையாடவுள்ள சர்வதேச தொடர்கள் குறித்த முழுமையான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான தங்களுடைய முதல் தொடரில் ஜிம்பாப்வே அணியை இம்மாதம் சொந்த நாட்டில் வைத்து எதிர்கொள்ளவுள்ளதுடன், தொடர்ந்து அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி விளையாடவுள்ளது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா
குறித்த இந்த தொடர்கள் நிறைவடைந்த பின்னர் அவுஸ்திரேலியா அணி எதிர்வரும் ஜூன் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், பாகிஸ்தான் அணி ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இதனைத்தொாடர்ந்து இலங்கை அணி ஆசியக்கிண்ணத்தொடரில் ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் விளையாடவுள்ளதுடன், ஒக்டோபர் – நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் T20 உலககக்கிண்ணத்தொடர் நடைபெறவுள்ளது.
இதேவேளை இறுதியாக இலங்கை அணி டிசம்பர் – ஜனவரி (2023) மாதங்களில் இந்தியா அணியுடன் தொடரொன்றை விளையாடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதும், இந்த தொடர் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர் அட்டவணை தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, “2022ம் ஆண்டு இலங்கை அணியின் தொடர்கள் அதிகரித்துள்ளமை ரசிகர்களுக்கு உற்சாகமடைய செய்யும்.
எம்மால் இந்த கிரிக்கெட் தொடர்கள் திட்டமிட்டப்படி நிறைவடைந்தால் இலங்கை கிரிக்கெட்டுக்கு சிறந்த உந்துகோலாக
இருக்கும். இந்த விடயம் எமது அணியின் வீரர்களின் திறமையை உலகிற்கு அறிய செய்ய உதவும் என்பதுடன் எமது பங்குதாரர்களுக்கும் சிறந்த விடயமாக அமையும்” என்றார்.
தொடர் | போட்டி வகைகள் | காலம் |
சுற்றுலா ஜிம்பாப்வே எதிர் இலங்கை | 03 ஒருநாள் போட்டிகள் | ஜனவரி 2022 |
சுற்றுலா இலங்கை எதிர் அவுஸ்திரேலியா | 05 T20I போட்டிகள் | ஜனவரி-பெப்ரவரி 2022 |
சுற்றுலா இலங்கை எதிர் இந்தியா | 03 T20I போட்டிகள் மற்றும் 02 டெஸ்ட் போட்டிகள் | பெப்ரவரி-மார்ச் 2022 |
சுற்றுலா இலங்கை எதிர் பங்களாதேஷ் | 02 டெஸ்ட் போட்டிகள் | மே 2022 |
சுற்றுலா அவுஸ்திரேலியா எதிர் இலங்கை | 03 T20I/ 05 ஒருநாள் / 2 டெஸ்ட் போட்டிகள் | ஜூன்-ஜூலை 2022 |
சுற்றுலா பாகிஸ்தான் எதிர் இலங்கை | 03 ஒருநாள் மற்றும் 02 டெஸ்ட் போட்டிகள் | ஜூலை-ஆகஸ்ட் 2022 |
ஆசிய கிண்ணம் | T20I போட்டிகள் | ஆகஸ்ட்-செப்டம்பர் 2022 |
T20 உலகக்கிண்ணம் | T20I போட்டிகள் | ஒக்டோபர்-நவம்பர் 2022 |
சுற்றுலா இலங்கை எதிர் இந்தியா | அறிவிக்கப்படவில்லை | டிசம்பர் 2022 – ஜனவரி 2023 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<