பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கவுள்ள இளம் துடுப்பாட்ட வீரர் சுபைர் ஹம்சா

830
Cape Cobras

பாகிஸ்தான் – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் மந்த கதியில் ஓவர்கள் வீசிய குற்றச்சாட்டில் போட்டித் தடையினைப் பெற்றிருக்கும் தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு ப்ளெஸிசின் இடத்தினை பாகிஸ்தான் – தென்னாபிரிக்க அணிகள் இடையே வெள்ளிக்கிழமை (11) ஜொஹன்னேஸ்பேர்க் நகரில் இடம்பெறும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நிரப்ப இளம் அறிமுக துடுப்பாட்ட வீரரான சுபைர் ஹம்சா அழைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஆஸி அணியில் 20 வயது வீரர்

இலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட்…

சுபைர் ஹம்சா யார்??

வெறும் 23 வயதேயான வலதுகை துடுப்பாட்ட வீரரான சுபைர் ஹம்சா, அண்மைக்காலங்களில் தென்னாபிரிக்காவின் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஜொலித்து வரும் வீரர்களில் ஒருவராக காணப்படுகின்றார். தற்போது கேப் கோப்ராஸ் அணிக்காக முதல்தரப் போட்டிகளில் ஆடி வரும் சுபைர் இதுவரையில் 49 முதல்தர போட்டிகளில் விளையாடி 49.29 என்கிற சிறந்த துடுப்பாட்ட சராசரியுடன் 3,648 ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

சுபைர் ஹம்சா தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட மேலதிக வீரர்களில் ஒருவராக முன்னதாக உள்ளடக்கப்பட்ட போதிலும், அவருக்கு பாப் டு ப்ளேஸிசின் வெற்றிடத்தினாலேயே தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஆடும் சந்தர்ப்பம் உருவாகியிருக்கின்றது.

பாகிஸ்தான் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை தென்னாபிரிக்க அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் மூலம் தனது கன்னி சர்வதேச போட்டியில் ஆடுவது குறித்துப் பேசிய ஹம்சா  ” ஒரு துடுப்பாட்ட தொகுதியாக, இவர்களுடன்  (தென்னாபிரிக்காவுடன்) இணைந்து துடுப்பாடுவதை உங்களால் கனவிலேயே நினைத்துப்பார்க்க முடியும். ” எனக் குறிப்பிட்டிருந்தார்

நியூசிலாந்து எதிராக சாதனை படைத்த திசர பெரேரா தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்

நியூசிலாந்து அணியுடனான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும்….

மேலும் பேசிய அவர் ” எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், அப்படியாக வாய்ப்பு வழங்கப்பட்டால் அது சிறப்பாக இருக்கும் ” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேநேரம், முன்னதாக தென்னாபிரிக்க அணியுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டது தொடர்பில் பேசிய அவர், இதுவரையில் (தென்னாபிரிக்க அணியுடன்) எனது தருணங்கள் அனைத்தினையும் இரசித்துக் கொண்டு இருக்கின்றேன். எனக்கு எல்லோரும் (தென்னாபிரிக்க வீரர்கள்) வரவேற்புத் தருகின்றனர். அதோடு அணி என்னை சூழ இருக்கும் போது மிகவும் சௌகரியமாக உணர்கின்றேன். எனக்கு வாய்ப்புத்தரப்படும் எனில், அந்த தருணத்தினை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்”  என்றார்.

தென்னாபிரிக்காவின் தலைநகரமான கேப் டவுனில் பிறந்த சுபைர் ஹம்சா, தென்னாபிரிக்க நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா, ஜெக்ஸ் கல்லிஸ் ஆகியோரினை முன்னுதரணமாக கொண்டு துடுப்பாட்ட வீரராக தனது கிரிக்கெட் வாழ்க்கையினை ஆரம்பம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாறு படைத்த இந்திய வீரர்களுக்கு பரிசுத்தொகை

அவுஸ்திரேலியாவில், 72 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் இந்தியா….

தனது முன்னுதாரண வீரர்கள் குறித்து பேசிய ஹம்சா, ”குறிப்பாக ஒருவரையல்லாமல் நான் யாரையவது எடுத்துப்பார்க்கும் போது, அப்படியான நபர்கள் இந்த விளையாட்டுக்கு கொண்டு வந்த விடயங்கள் என்ன என்பதனை பார்க்கின்றேன். பாப் (டூ ப்ளெஸிசை) பார்க்கும் போது அவர் எப்போதும் மைதானத்தில் சாந்தமாகவே இருப்பார். இதேநேரம் (ஜேக்) கல்லிஸின் நுணுக்கங்கள் கொண்டவராக இருப்பார். அதோடு, விராட் கோஹ்லி போட்டி மீதான ஈர்ப்பு கொண்டவராக இருப்பார். இப்படியான விடயங்களை நான் அவதானித்து செயற்படுகின்றேன்.” என்றார்.

அதோடு சுபைர் ஹம்சா தனது போட்டித் திட்டங்கள் பற்றி பேசும் போது, ” நான் எனது அணியில் இருக்கும் வீரர்களிடமிருந்து மைதானத்திற்கு வெளியேயோ உள்ளோ பல விடயங்களை கற்றிருக்கின்றேன். என்னைப் பொறுத்தவரை போட்டித்திட்டங்களை எனது உள்ளத்திற்கு ஏற்றாற் போல் அமைத்துக்கொண்டு எனது நிலையில் இருப்பதே நோக்கமாக உள்ளது. மேலும், நான் தன்னம்பிக்கையோடும், தன்னார்வத்தோடும் இருக்க முயற்சி செய்கின்றேன். ” என குறிப்பிட்டார்.

சுபைர் ஹம்சா பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேசப் போட்டிகளுக்கு அறிமுகமாகுவார் எனின், தென்னாபிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடும் 335ஆவது வீரராக மாறுவார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<