சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) தமது அங்கத்துவ நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டினை விருத்தி செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
“நோ போல்” பந்துகளை அவதானிக்கவுள்ள தொலைக்காட்சி நடுவர்!
அந்தவகையில், ஐ.சி.சி. இந்த முயற்சிகளின் ஒரு அங்கமாக கடந்த ஆண்டு (2019) கிரிக்கெட் விளையாட்டில் முன்னேற்றம் காண்பித்த தமது அங்கத்துவ நாடுகளை ஊக்குவிக்கும் முகமாகவும், கௌரவிக்கும் முகமாகவும் ஆறு பிரிவுகளில் விருதுகளை வழங்கியுள்ளது.
நாடுகளுக்கு வழங்கப்பட்ட விருதுகள் ஐ.சி.சி. முன்னேற்ற விருதுகள் (ICC Development Awards) என அழைக்கப்படுவதோடு இந்த விருதுகளை கிரிக்கெட் விளையாட்டில் அதீத முன்னேற்றம் காட்டிய அங்கத்துவ நாடுகள் பெற்றிருக்கின்றன.
இந்த விருதுகளில் பபுவா நியூ கினியா, கிரேய்-நிக்கோல்ஸ் பங்கேற்பு நிகழ்ச்சித்திட்ட விருதினை (Grey-Nicolls Participation Programme) வென்றிருக்கின்றது. பபுவா நியூ கினியாவில் கடந்த ஆண்டு செயற்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் மூலமாக ஆண், பெண் என கிட்டத்தட்ட 235,000 பேர் வரையில் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான புதிய அறிமுகத்தினைப் பெற்றனர்.
Video – இலங்கை இரசிகர்களுக்கு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் | Cricket Galatta Epi 30
இவ்வாறு கிரிக்கெட் விளையாட்டின் அறிமுகம் பெருமளவிலான நபர்களுக்குச் சென்றடையக் காரணமாக இருந்த பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்தியமைக்காகவே கிரேய்-நிக்கோல்ஸ் பங்கேற்பு நிகழ்ச்சித்திட்ட விருதினை பபுவா நியூ கினியா வென்றிருந்தது.
இதேநேரம், கிரிக்கெட் விளையாட்டில் 100 சதவீத பெண்கள் பங்கேற்பு நிகழ்ச்சி திட்ட விருதினை (100% Cricket Female Participation Programme) கிழக்காபிரிக்க நாடான ருவான்டா பெற்றிருக்கின்றது. ருவான்டா கிரிக்கெட் விளையாட்டினை பெண்களுக்கு ஒரு சமூக அந்தஸ்து பெற்றுக்கொடுக்கும் கருவியாக பயன்படுத்தியமைக்காகவே கிரிக்கெட் விளையாட்டில் 100 சதவீத பெண்கள் பங்கேற்பு நிகழ்ச்சி திட்ட விருதினை பெற்றுள்ளது.
அதேநேரம், கடந்த ஆண்டு ஆடவர் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஐ.சி.சி. இன் அங்கத்துவ நாடாக நமிபீயா மாறியிருக்கின்றது. தெற்காபிரிக்க நாடான நமிபீயா கடந்த ஆண்டு ஐ.சி.சி. உலக லீக் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற தீர்மானமிக்க போட்டியொன்றில் ஹொங்கொங் அணிக்கு எதிராக வெற்றியினை பதிவு செய்தமைக்காகவே ஆடவர் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஐ.சி.சி. இன் அங்கத்துவ நாடாக மாறியது.
அதோடு, ஹொங்கொங் அணிக்கு எதிரான குறித்த வெற்றி நமிபீயாவுக்கு 16 வருடங்களின் பின்னர் ஒருநாள் போட்டிகளுக்கான அந்தஸ்தினையும் பெற்றுக்கொடுத்திருந்தது.
லன்கன் ப்ரீமியர் லீக் திகதி அறிவிப்பு
கடந்த ஆண்டின் ஒகஸ்ட் மாதம் மகளிர் T20 உலகக் கிண்ணத்திற்காக நடைபெற்ற தகுதிகாண் போட்டியொன்றில் அயர்லாந்துக்கு எதிராக வெற்றியினைப் பதிவு செய்தமைக்காக தாய்லாந்து, மகளிர் கிரிக்கெட் விளையாட்டில் கடந்த ஆண்டு சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஐ.சி.சி. இன் அங்கத்துவ நாட்டுக்குரிய விருதினை வென்றிருக்கின்றது.
மறுமுனையில் புயல் நிவாரண உதவிகளுக்காக கிரிக்கெட் விளையாட்டினை உபயோகம் செய்த ஜப்பான், நலத்திட்டம் ஒன்றுக்காக கிரிக்கெட் விளையாட்டினை பயன்படுத்திய ஐ.சி.சி. இன் அங்கத்துவ நாட்டுக்குரிய விருதை வென்றதுடன், கடந்த ஆண்டு அதிக கிரிக்கெட் போட்டிகளை நேரலை செய்த பின்லாந்து சிறந்த டிஜிடல் வசதிகள் (Digital Engagement) கொண்ட நாட்டுக்குரிய ஐ.சி.சி. இன் அங்கத்துவ நாட்டுக்குரிய விருதினைப் பெற்றுக் கொண்டது.
ஐ.சி.சி. தமது முன்னேற்ற விருதுகளுக்கான அங்கத்துவ நாடுகளை கிரிக்கெட் விளையாட்டில் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நடுவர்கள் குழு ஒன்றின் மூலம் தேர்வு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<