குப்பைகளை அள்ளி ஆஷஸ் போட்டியை காண வந்த ஆஸி. சிறுவன்

207
Cricket Network

நான்கு வருடங்களாக குப்பைகளை அள்ளி அதன் மூலம் சேர்த்த பணத்தால் ஆஷஸ் டெஸ்ட் போட்டியைப் பார்வையிட அவுஸ்திரேலியவைச் சேர்ந்த மெக்ஸ் வெய்ட் என்ற சிறுவன் இங்கிலாந்துக்கு வருகை தந்துள்ளான்.

இந்த சிறுவனின் கதையைக் கேள்வியுற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் அவனுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து தங்களுடன் பயணிக்க வைத்தனர்.

சாதனைப் பட்டியலில் சங்காவைக் கடந்த ஸ்மித்

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய…..

அவுஸ்திரேலியவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் மெக்ஸ் வெய்ட் கடந்த 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளான்.

அப்போது கிரிக்கெட் போட்டியில் மிகவும் பழைமையான இங்கிலாந்து – அவுஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரை இங்கிலாந்தில் சென்று பார்க்க விரும்பினான். 

தனது ஆசையை தன் தந்தை டேமியனிடம் கூறி இருக்கிறான் மெக்ஸ். அதற்கு அவர் 1500 அவுஸ்திரேலிய டொலர்களை சம்பாதித்துக் கொடுத்தால் அவனை இங்கிலாந்து அழைத்து செல்வதாக கூறி உள்ளார். 

உடனே தன் தாயுடன் கலந்துபேசி வார இறுதி நாட்களில் அருகே இருக்கும் வீடுகளின் குப்பைகளை எடுத்துச் செல்ல அவர்களுக்கு உதவுவதற்கு தீர்மானித்தான். அதற்கு ஒரு வீட்டிற்கு ஒரு அவுஸ்திரேலிய டொலர் சம்பளமாக வழங்கப்பட்டது.  

சுமார் நான்கு வருடங்கள் பக்கத்துக்கு வீடுகளில் வார இறுதி நாட்களில் குப்பை அள்ளி ஒரு வழியாக 1500 அவுஸ்திரேலிய டொலர்களை சம்பாதித்தான் மெக்ஸ். தான் சொன்னதை மகன் செய்த உடன், தந்தை டேமியனும் உடனடியாக குடும்பத்துடன் இங்கிலாந்து செல்ல சம்மதம் தெரிவித்துள்ளார். 

இதன்படி, கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகிய ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியைப் பார்வையிடுவதற்கு மெக்ஸ் வெய்ட் தனது பெற்றோருடன் அங்கு சென்றான். 

இது குறித்து அவுஸ்திரேலிய அணிக்கு தெரிய வர பெட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் மெக்ஸை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். 

மேலும், போட்டியின் இரண்டாவது நாள் மதியபோசண இடைவேளையின் போது அவுஸ்திரேலிய அணி வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை பெட் கம்மின்ஸ் மைதானத்தில் வைத்து மெக்ஸுக்கு வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி, அவுஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் வோஹ் மற்றும் அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உடன் அமர்ந்து வீரர்களின் பஸ்ஸில் பயணிப்பதற்கான வாய்ப்பும் அந்த சிறுவனுக்கு கிடைத்திருந்தது. இதனை ஸ்டீவ் வோஹ் அப்போது புகைப்படம் எடுத்து தன் இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார். 

கரீபியன் ப்ரீமியர் லீக்கிலிருந்து பிராவோ திடீர் விலகல்

உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்ற டி20…..

மேலும், அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான திட்டத்தை குறித்து வைக்கும் குறிப்பு புத்தகத்தை அவனிடம் அளித்து என்ன திட்டம் என்பதை பார்க்க வைத்துள்ளார். அவுஸ்திரேலிய அணி வீரர்கள் கூட அதை பார்க்க முடியாது எனும் நிலையில் மெக்ஸுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

எனவே, நான்கு வருடங்களாக உழைத்து அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டியைப் பார்க்க ஆசைப்பட்ட மெக்ஸின் கனவு நனவாகியது விளையாட்டு உலகைப் பொறுத்தமட்டில் இந்த நூற்றாண்டின் நெகிழ்வான சம்பவம் என்றால் மிகையாகாது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<