இலங்கை வலைப்பந்து அணியின் முன்னணி வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் வலைப்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தீடிர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
>> நான்காவது காற்பகுதி அபாரத்தால் இலங்கைக்கு திரில் வெற்றி
இலங்கை கடந்த ஆண்டு ஆசிய வலைப்பந்து சம்பியன்களாக மாற முக்கிய காரணமாக அமைந்திருந்த தர்ஜினி சிவலிங்கம் அதற்கு முன்னரும் இலங்கை வலைப்பந்து அணியின் சாதனை வெற்றிகளுக்கு காரணமாக அமைந்திருந்தார்.
அதேநேரம் தனது ஓய்வு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அவர் கனத்த இதயத்துடன் இந்த முடிவினை எடுத்திருந்ததாக கூறியிருந்தார்.
“கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆயினும் இதுவே ஓய்வு பெறுவதற்கான சிறந்த தருணம் எனக் கருதுகின்றேன்.” என தர்ஜினி குறிப்பிட்டிருந்தார்.
இதேநேரம் இலங்கை வலைப்பந்து அணிக்காக ஓய்வு பெற்ற போதும் தான் தொடர்ந்து வெளிநாட்டு வலைப்பந்து லீக் தொடர்களில் ஆடும் எண்ணத்துடன் காணப்படுவதாக கூறியிருக்கின்றார்.
தர்ஜினி சிவலிங்கம் அவுஸ்திரேலியாவின் சிட்டி வெஸ்ட் பல்கோன்ஸ் அணிக்காக ஆடிவருவதும் குறிப்பிடத்தக்கது.
“ஜீனி” என்னும் செல்லப் பெயரோடு அழைக்கப்படுகின்ற தர்ஜினி சிவலிங்கம், தனது தீடிர் ஓய்வு தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கின்றது.
ஓய்வினை அறிவித்திருக்கும் தர்ஜினி சிவலிங்கம் சிறந்த நிலை ஒன்றை அடைதவற்கு, ThePapare.com சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<