இலங்கை கால்பந்து சம்மேளன தலைவருக்கு எதிராக தடை உத்தரவு

462

ஜே. சிறி ரங்கா தலைமையில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனம் தங்களது பதவிகளை பொறுப்பேற்பதற்கு எதிராக தற்காலிக நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

>> இலங்கை கால்பந்தின் தலைவரானார் ஸ்ரீ ரங்கா; ஜஸ்வர் தகுதி நீக்கம்

இந்த தடையுத்தரவு இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்ட ஜஸ்வர் உமர் வழங்கிய மனுவிற்கு அமையவே பிறப்பிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதேவேளை தற்காலிக தடையுத்தரவானது நாளை வரையில் அமுலில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்து சம்மேளன தேர்தலில் தன்னை போட்டியிட அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டே முன்னாள் தலைவர் நீதிமன்றத்திற்கு மனு வழங்கியிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

அதன்படி ஜஸ்வர் நேற்று (17) மாலை நீதிமன்றத்திற்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மனு வழங்கியருந்ததாக கூறப்படுகின்றது.

ஜே சிறி ரங்கா தலைமையிலான தரப்பு கடந்த வாரம் விமர்சனங்களுக்கு மத்தியில் நடைபெற்ற இலங்கை கால்பந்து சம்மேளனத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலம்: NewsWire

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<