T20 உலகக்கிண்ணத்துக்கான குழு விபரங்கள் வெளியானது!

ICC Men’s T20 World Cup 2024

560
Teams and Groups revealed for ICC Men’s T20 World Cup 2024

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடருக்கான குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமான தி டெலிகிராம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்தில் ஒட்டுமொத்தமாக 20 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், முதல் சுற்றில் 20 அணிகள் 4 குழுக்களாக வகுக்கப்பட்டுள்ளன. 

>> பாகிஸ்தான் தொடருக்கான நியூசிலாந்து T20I குழாம் அறிவிப்பு

வெளியிடப்பட்டுள்ள குழுக்களின் அடிப்படையில் இலங்கை அணி குழு D இல் இடம்பெற்றுள்ளது. இலங்கை, தென்னாபிரிக்கா, நெதர்லாந்து, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளன. 

ஒரு குழவில் ஐந்து அணிகள் உள்வாங்கப்படும் என்பதுடன், அடுத்ததாக சுபர் 8 சுற்று நடைபெறும். இதில் குழுக்களில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சுபர் 8 சுற்றில் மோதும். 

கடந்த காலங்களில் குழுநிலையில் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த குழுவில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணியை எதிர்கொள்ளும் வகையில் போட்டி அட்டவணைகள் அமைக்கப்பட்டிருந்தன. 

எவ்வாறாயினும் இம்முறை குழுநிலை இடங்களை தவிர்த்து T20 தரவரிசையின்படி சுபர் 8 சுற்றுக்கான அணிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இங்கிலாந்து அணி குழு B இல் முதல் இரு இடங்களில் ஒரு இடத்தை பிடித்தால், B1 அணியாக கருதப்பட்டு, சுபர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளை எதிர்கொள்ளும். 

இதேவேளை கீழே காட்டப்பட்டுள்ள சுபர் 8 அட்டவணையின் படி அவுஸ்திரேலிய அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணி சுபர் 8 சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் அவுஸ்திரேலியாவின் B2 இடத்தை பிடித்து சுபர் 8 சுற்றில் போட்டியிடும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. 

முதல் சுற்றுக்கான குழுக்கள் 

குழு A  குழு B  குழு C  குழு D 
இந்தியா  இங்கிலாந்து  நியூசிலாந்து  தென்னாபிரிக்கா 
பாகிஸ்தான்  அவுஸ்திரேலியா  மே.தீவுகள்  இலங்கை 
அயர்லாந்து  நமீபியா  ஆப்கானிஸ்தான்  பங்களாதேஷ் 
கனடா  ஸ்கொட்லாந்து  உகண்டா  நெதர்லாந்து 
அமெரிக்கா  ஓமான்  பப்புவா நியூகினியா  நேபாளம் 

இரண்டாவது சுற்றுக்கான குழுக்கம் 

Group 1 – USA  Group 2 – Caribbean 
A1 – இந்தியா  A2 – பாகிஸ்தான் 
B2 – அவுஸ்திரேலியா  B1 – இங்கிலாந்து 
C1 – நியூசிலாந்து  C2 – மே.தீவுகள் 
D2 – இலங்கை  D1 – தென்னாபிரிக்கா   

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<