இலங்கை கிரிக்கெட் சபையினால் அடுத்த மாதம் நடத்தப்படவுள்ள அங்குரார்ப்பண லங்கா T10 சுபர் லீக் தொடரில் லங்கா வூ சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் ஆறு அணிகளின் பெயர்கள் மற்றும் சின்னங்களை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (1) அறிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ், கோல் மார்வெல்ஸ், ஜப்னா டைட்டன்ஸ், கெண்டி போல்ட்ஸ், ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் மற்றும் நிஙம்பு பிரேவ்ஸ் ஆகிய அணிகள் அங்குரார்ப்பண லங்கா T10 சுபர் லீக் தொடரில் இணையவுள்ளன.
- லங்கா T10 தொடர் குறித்து வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு
- லங்கா T10 லீக் தொடருக்கான வீரர்கள் பதிவு ஆரம்பம்
- லங்கா T10 சுபர் லீக் வீரர்கள் நிரல்படுத்தல் நவம்பரில்
இந்த ஆறு அணிகளும் இலங்கையில் உள்ள பிரதான நகரங்களாக விளங்குவதுடன், இந்த அணிகளின் பெயர்கள் ஒவ்வொரு நகரத்தின் வலிமைகளையும் தனித்துவமான பண்புகளையும் எடுத்துக் காட்டுகிறது. இது கிரிக்கெட் விளையாட்டை உள்ளூர் அடையாளத்துடன் இணைப்பதுடன், சமூகத்தின் பெருமையையும் தங்கள் அணிக்கான ஆதரவையும் ஊக்குவிக்கிறது.
அங்குரார்ப்பண லங்கா T0 சுபர் லீக் தொடர் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. அத்துடன், இந்த தொடருக்கான வீரர்கள் வரைவு எதிர்வரும் 10ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லங்கா T10 லீக்கில் பங்கேற்கும் அணிகள்
- கொழும்பு ஸ்;;ட்ரைக்கர்ஸ்
- கோல் மார்வெல்ஸ்
- ஜப்னா டைட்டன்ஸ்
- கெண்டி போல்ட்ஸ்
- ஹம்பாந்தோட்டை பங்களா புலிகள்
- நிஙம்பு பிரேவ்ஸ்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<