ஹொரனை டக்சிலா மத்தியக் கல்லூரி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர மகா வித்தியாலயம் அணிகளுக்கு இடையிலான பாடசாலை 19 வயதின் கீழ் டிவிசன் 2 பிரிவு B இறுதிப்போட்டி நடைபெற்று முடிந்துள்ளது.
டக்சிலா மத்தியக் கல்லூரி அரையிறுதிப்போட்டியில் பாணந்துரை றோயல் கல்லூரியை வீழ்த்தியிருந்ததுடன், ஸ்ரீ ஜயவர்தனபுர மகா வித்தியாலயம் ஹெங்கம மத்தியக் கல்லூரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னுறியது.
>> ரோயல் செலஞ்சர்ஸ் அணியுடன் இணையும் தென்னாபிரிக்க வேக நட்சத்திரம்
இறுதிப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்ட டக்சிலா கல்லூரி 138 ஓட்டங்களுக்கு ஜயவர்தனபுர மகா வித்தியாலத்தை கட்டுப்படுத்தியது. பந்துவீச்சில் செவிந்து செவின் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், ஜயவர்தனபுர மகா வித்தியால அணிக்காக ஜயந்து சங்கபால 42 ஓட்டங்களையும், சச்சின் செஹான் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய டக்சிலா மத்தியக் கல்லூரி சந்தித் ரணவீர மற்றும் ஜனித் தனன்ஜய ஆகியோரின் அபாரமான துடுப்பாட்டங்களின் உதவியுடன் 100.3 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 341 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சந்தித் ரணவீர 92 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று சதத்தை தவறவிட்டதுடன், ஜனித் தனன்ஜய 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் அசிர ஜயவர்தன 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.
தொடர்ந்து தங்களுடைய 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த ஜயவர்தனபுர மகா வித்தியாலத்தை 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், ஆட்டம் நிறுத்தப்பட்டதுடன் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களால் வெற்றிபெற்று டக்சிலா மத்தியக் கல்லூரி சம்பியனாக முடிசூடியது.
சுருக்கம்
டக்சிலா மத்தியக் கல்லூரி சம்பியனாக முடிசூடியுள்ளதுடன், ஸ்ரீ ஜயவர்தனபுர மகா வித்தியாலயமும் டிவிசன் 2 பிரிவு A கிரிக்கெட் போட்டிகளுக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ ஜயவர்தனபுர மகா வித்தியாலயம் – 138 (50.2) ஜயந்து சங்கல்ப 42, சச்சின் செஹான் 30, சவிந்து செவின் 4/46
டக்சிலா மத்தியக் கல்லூரி 341 (100.3) சந்தித் ரணவீர 92, ஜனித் தனன்ஜய 52, சமோத் மிஹிரான் 44, அசிர ஜயவர்தன 3/39,
முடிவு – சமனிலை (முதல் இன்னிங்ஸ் புள்ளிகளால் டக்சிலா மத்தியக் கல்லூரி வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<