பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளருக்கு உபாதை

217
Taskin ruled out of ODI series opener

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான தஸ்கின் அஹ்மட்டிற்கு முதுகு உபாதை ஏற்பட்டதனை அடுத்து, அவர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> சரித் அசலன்கவின் ஆட்டத்தோடு ஒருநாள் தொடரினை சமநிலை செய்த இலங்கை

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் விளையாடுகின்றது.

இந்த சுற்றுப் பயணத்தில் பங்களாதேஷ் – இந்திய அணிகள் பங்குபெறும் ஒருநாள் தொடர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) ஆரம்பமாகவுள்ள நிலையிலையே தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அஹ்மட் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கிற்காக பங்களாதேஷ் – இந்திய அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இதில் தஸ்கின் அஹ்மட் தொடர்ந்து பங்கேற்பது குறித்து, அவர் தொடர்பிலான மருத்துவ பரிசோதனைகளை வைத்து முடிவு எடுக்கப்படும் என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளராக இருக்கும் மின்ஹாஜூல் ஆப்தின் கிரிக்பஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

>> ஜனவரியில் ஆரம்பமாகவுள்ள ILT20 தொடர்!

அதேவேளை உள்ளூர் போட்டியொன்றில் விளையாடிய பங்களாதேஷ் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் தமிம் இக்பாலும் தொடைப் பகுதியில் உபாதையினை எதிர்கொண்டிருப்பதாக கூறப்பட்டிருப்பதோடு அவரும், இந்திய – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<