பங்களாதேஷ் வீரருக்கு அபராதம் விதித்த ஐசிசி!

187

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தன்ஷிம் ஹஸன் ஷகீபிற்கு அவருடைய போட்டிக் கட்டணத்திலிருந்து 15  சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரில் நேபாளம் அணிக்கு எதிராக நடைபெற்ற குழுநிலை போட்டியின் போது, ஐசிசியின் விதிமுறையை மீறியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 

விஷ்மி, கவீஷா அதிரடியில் இலங்கை மகளிர் ஒருநாள் தொடர் வெற்றி

கிங்ஸ்டவுனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தன்ஷிம் ஹஸன் அவருடைய மூன்றாவது பந்து ஓவரை வீசும் போது, எதிரணி துடுப்பாட்ட வீரரான  ரோஹித் பௌடலை நெருங்கி ஆக்ரோஷமான முறையில் செயற்பட்டிருந்தார். 

குறித்த இந்த செயற்பாடினை அவதானித்த கள நடுவர்கள், போட்டி மத்தியஸ்தரிடம் முறைப்பாடை தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து போட்டி மத்தியஸ்தர் ரிச்சி ரிச்சட்சன் நடத்திய விசாரணையில் குற்றத்தை தன்ஷிம் ஹஸன் ஒப்புக்கொண்டதன் காரணமாக அவருக்கு மேற்குறிப்பிட்டவாறு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அதுமாத்திரமின்றி கடந்த 24 மாதங்களில் இவருடைய முதல் குற்றமாக இது பதிவாகியதால் அவருக்கு ஒரு தரமிறக்கல் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<