19 வயதுக்கு உட்பட்ட பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பை அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான யூனிஸ் கான் நிராகரித்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அடுத்த வருடம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பல்வேறு சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்து வருகின்றது, அதன்படி, 19 வயதுக்கு உட்பட்ட பாகிஸ்தான் அணி, கடந்த மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. எனினும், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளை இலக்ககாகக் கொண்டு இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் காரணமாக இலங்கைக்கான சுற்றுப்பயணம் காலவரையிறின்றி ஒத்திவைக்கப்பட்டது.
டி20 அணிகள், வீரர்களின் தரவரிசைகளில் எதிர்பாராத மாற்றங்கள்
பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி முடிவின்…
எனினும், அந்த அணி எதிர்வரும் ஜுன் மாதம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுளள்து.
இது இவ்வாறிருக்க, அண்மைக்காலமாக இருந்து வந்த அந்நாட்டு 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் ஆகிய பதவிகளுக்கு முன்னாள் வீரரான யூனிஸ் கானை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்னெடுத்து வந்தது.
எனினும், தனக்கு இளையோர் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஆகிய இரண்டு பதவிகளையும் அளிக்க வேண்டும் என யூனிஸ் கான் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அந்த கோரிக்கையை அந்நாட்டு கிரிக்கெட் சபை நிராகரித்துவிட்டது. இதன் காரணமாக அவர் பயிற்சியாளராகும் வாய்ப்பையும் நிராகரித்துவிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் வசிம் கான் கருத்து வெளியிடுகையில், ”நாங்கள் யூனிஸ் கானுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தோம். ஆனால் அவர் தனது பதவிக்காக அதிகளவு ஒப்பந்தத் தொகையொன்றை கோரியிருந்தார். எனினும், அந்தப் பதவிக்கு அவ்வளவு பணத்தை கொடுப்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விரும்பவில்லை. அதேபோல அவருக்கு தேர்வுக் குழுவில் முக்கிய பதவி வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆனால் நாங்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே கடந்த 3 வாரங்களுக்கு முன் அவருடன் இறுதியாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். இறுதியில் எந்தவொரு இணக்கப்பாட்டிற்கும் வரமுடியாமல் போனது” என தெரிவித்தார்.
எனினும், யூனிஸ் கான் ஓய்வுபெற்ற நாள் அந்நாட்டு கிரிக்கெட் சபையுடனான நல்லதொரு உறவொன்றை பேணி வரவில்லை என அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அவரை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் பயிற்சியாளராக நியமிப்பபதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை அதிகாரிகள் சிலர் எதிர்ப்பினை வெளியிட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல, குறித்த விடயம் தொடர்பில் யூனிஸ் கான் அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எந்தவொரு கருத்தையும் வெளியிடுவதற்கு முன்வரவில்லை. ஆனால் அவை பேச்சுவார்த்தைகளில் இருந்ததாக மாத்திரம் அந்நாட்டு கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியிருந்தது.
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பையுடன் மோதவுள்ள சென்னை
ஐ.பி.எல். தொடரில் நேற்று (10) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி…
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான யூனிஸ் கான், 2017 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட யூனிஸ் கான். 118 டெஸ்ட், 265 ஒருநாள் மற்றும் 25 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<