சைனீஸ் தாய்ப்பே மெய்வல்லுனரில் அருண, தருஷிக்கு தங்கம்

197
Taiwan Open Athletic Championship 2024

சைனீஸ் தாய்ப்பேயில் இன்று (01) ஆரம்பமாகிய தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் அருண தர்ஷன, தருஷி கருணாரத்ன ஆகிய இருவரும் தங்கப் பதக்கங்களை சுவீகரிக்க, கயன்திகா அபேரட்ன வெள்ளிப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.82 செக்கன்களில் நிறைவு செய்த அருண தர்ஷன முதலாம் இடத்தைப் பெற்றார். முன்னதாக கடந்த 2 தினங்களுக்கு முன சீனாவில் நடைபெற்ற பெல்ட் அண்ட் ரோட் மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.48 செக்கன்களில் ஓடி முடித்து முதலிடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை தருஷி கருணாரத்ன 52.48 செக்கன்களில் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்றார். பெண்களுக்கான 400 மீற்றரில் அவரது தனிப்பட்ட சிறந்த காலப் பெறுமதியாக இது இடம்பிடித்தது.

இந்த நிலையில், குறித்த போட்டியில் பங்குகொண்ட மற்றொரு இலங்கை வீராங்கனையான நதீஷா ராமநாயக்க (53.93 செக்.) நான்காம் இடத்தைப் பிடித்தார்.

இதனிடையே, பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள் 24.66 செக்கன்களில் நிறைவு செய்த கயன்திகா அபேரட்ன 2ஆம் இடத்தைப் பிடித்தார். புனுக்கு, ஒலிம்பிக் அடைவு மட்ட நேரமான 10.00 செக்கன்களை அடைய முடியாமல் போனது.

எவ்வாறாயினும், குறித்த மூன்று வீரர்களுக்கும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கான உரிய அடைவு மட்டத்தை எட்ட முடியாமல் போனது.

இதேவேளை, தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் கடைசி நாளான நாளை (02) நடைபெறவுள்ள பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்னவும், கயன்திகா அபேரட்னவும் பங்குபற்றவுள்ளனர. அத்துடன் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் டில்ஹானி லேக்கம்மே பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<