தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய சம்ஷி

88
Tabraiz Shamsi

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை (CSA) தமது வீரர்களுக்கு வழங்கும் பிரதான ஒப்பந்தத்தில் (Central Contract) இருந்து முன்னணி மணிக்கட்டு சுழல்வீரரான தப்ரைஸ் சம்ஷி விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

>>தேசிய 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியில் இரு யாழ். வீரர்கள்<<

தப்ரைஸ் சம்ஷி மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற பரஸ்பர பேச்சுவார்த்தைகளின் பின்னரே சம்ஷி ஒப்பந்தத்தில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

தப்ரைஸ் சம்ஷி தற்போது உலகம் பூராகவும் நடைபெற்று வருகின்ற T20 லீக்குகளில் அதிக கவனம் செலுத்துவதன் காரணமாகவே தென்னாபிரிக்க அணியுடனான வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்படுகின்றது 

எனவே தப்ரைஸ் சம்ஷிக்கு இனிமேல் T20 லீக்குகள் நடைபெறும் சந்தர்ப்பத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சர்வதேச போட்டிகள் காணப்பட்ட போதிலும் குறிப்பிட்ட போட்டிகளில் பங்கெடுக்காமல், லீக் போட்டிகளில் ஆடுவதற்கான சுதந்திரம் காணப்படுகின்றது 

அதேநேரம் 34 வயது நிரம்பிய சம்ஷி தென்னாபிரிக்க வீரர்களுக்கான பிரதான ஒப்பந்தத்தினை பெறாத போதிலும், அவரினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அவரின் உடற்தகுதி மற்றும் Perfomance இணை கருத்திற் கொண்டு ஆட வைக்க எதிர்பார்ப்பதாக தென்னாபிரிக்க கிரிக்கட் சபையின், கிரிக்கெட் விடயங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி (CSA Director of Cricket) எனோச் ங்வே (Enoch Nkwe) குறிப்பிட்டுள்ளார் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<