டி20 பிளாஸ்டில் சசெக்ஸ் அணியில் இணைகிறார் குலசேகர

914
Sussex sign Sri Lanka fast bowler Nuwan Kulasekara for T20 Blast
Getty

இங்கிலாந்தில் கவுண்டி அணிகளுக்கு இடையில் ‘நெட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட்’ 20 ஓவர் கிரிக்கட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் தெற்குப் பிரிவு சார்பில் சசெக்ஸ் அணி பங்கேற்று வருகிறது.

இந்த அணி பங்களாதேஷ் அணியின் இளம் வீரரான முஸ்தபிசுர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது. ஆனால், .பி.எல். தொடரின்போது இவரது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டதால் இங்கிலாந்து செல்வது தாமதமானது. இதனால் சசெக்ஸ் அணி இலங்கை அணியின் 33 வயதாகும் நுவன் குலசேகரவை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் கென்ட், மிடில்செக்ஸ் மற்றும் கிளேமோர்கன் அணிகளுக்கெதிராக விளையாட இருக்கிறார்.

முஸ்தபிசுர் ரஹ்மான் கடைசி நான்கு போட்டிகளிலும், ரோயல் லண்டன் ஒருநாள் தொடரின் நான்கு போட்டிகளிலும் கலந்து கொள்வார் என்று சசெக்ஸ் கழகம் எதிர்பார்க்கிறது.

ஏற்கனவே கென்ட் அணிக்கெதிராக விளையாட இங்கிலாந்து வீரர் ஜோர்டானை அழைத்துள்ளது. இந்தப் போட்டி முடிந்த பின்னர் அவர் இலங்கை அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் விளையாடச் செல்வார். தெற்குப் பிரிவில் சசெக்ஸ் அணி தற்போது 4ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதுவரை இலங்கை அணிக்காக 50 சர்வேதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நுவன் குலசேகர 56 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்தோடு இருபதுக்கு20 போட்டிகளில் மொத்தமாக 96 போட்டிகளில் விளையாடியுள்ள நுவன் குலசேகர 104 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்