சுசந்திகா ஜயசிங்கவின் ஆலோசகர் பதவிக்கு நிரந்தர நியமனம்

2020 Tokyo Paralympics

250

ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கையின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீரங்கனையான சுசந்திகா ஜயசிங்க விளையாட்டுத்துறை அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளா ர்.

சுசந்திகா ஜயசிங்கவுக்கு கொரோனா தொற்று உறுதி

சுசந்திகா ஜயசிங்க இதற்குமுன் விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார். எனினும், அவருக்கு நிரந்தர நியமனமாக அந்தப் பதவி வழங்கப்படவில்லை. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்த அடிப்படையில் அந்தப் பதவி புதுப்பிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, தற்போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் முயற்சியால் அவர் ஓய்வுபெறும் வரை குறித்த பதவியில் இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<