சுசந்திகா ஜயசிங்கவுக்கு கொரோனா தொற்று உறுதி

235
NOC

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும், இலங்கையின் முன்னாள் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனையுமான சுசந்திகா ஜயசிங்க கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைக்குப் பிறகு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரது குடும்ப வட்டாரங்களின்படி, அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்க தயாராக இருந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரவி சாஸ்திரிக்கு கொவிட்-19 தொற்று; பலர் தனிமைப்படுத்தலில்

இதனிடையே, அவரது இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மெய்வல்லுனர் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மெய்வல்லுனர் ஆலோசகராக பல்வேறு சந்தர்ப்பங்களில் பணிபுரிந்த சுசந்திகா ஜயசிங்கவுக்கு தற்போது 47 வயதாகிறது.

2000ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 200 மீட்டரில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா, உலக சம்பியன்ஷிப் மெய்வல்லுனரில் இரண்டு பதக்கங்களையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<