இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக மீண்டும் சுரேஸ் சுப்ரமணியம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர் எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நான்கு வருட காலம் இவர் பணியில் இருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழு தேர்தலில் 9 வாக்குகள் வித்தியாசத்தில், எதிர்த்து போட்டியிட்ட ஹேமசிரி பெர்னாண்டோவை தோல்வியடையச்செய்து மீண்டும் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தமிழ் பேசும் வீரர்கள் சாதனை
தேசிய ஒலிம்பி குழுவின் 35 விளையாட்டு சங்கங்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருக்கும் நிலையில், இதில் 21 வாக்குகளை சுரேஸ் சுப்ரமணியம் பெற்றுக்கொண்டதுடன், 12 வாக்குகளை ஹேமசிறி பெர்னாண்டோ பெற்றுக்கொண்டார்.
அதேநேரம் நான்கு உப தலைவர்களுக்கான போட்டியில், கான்ஜன ஜயரத்ன (20 வாக்குகள்), நிலு ஜயதிலக்க (20 வாக்குகள்), ஜோஸப் கெனி (19 வாக்குகள்) மற்றும் சுரன்ஜித் பிரேமதாஸ (19 வாக்குகள்) தங்களுடைய பதவி இடங்களை பெற்றுக்கொண்டனர்.
ஏற்கனவே தேசிய ஒலிம்பி குழுவின் பொது செயலாளராக செயற்பட்டுவந்த மெக்ஸ்வேல் டி சில்வா 23 வாக்குகளை பெற்று தன்னுடைய பதவியை தக்கவைத்ததுடன், இவருக்கு எதிராக போட்டியிட்ட மொஹான் விஜேசிங்க 10 வாக்குகளை பெற்றார்.
அத்துடன் பொருளாலருக்கான போட்டியில் சுரேஸ் சுப்ரமணியம் குழுமத்தின் காமினி ஜயசிங்க வெற்றிபெற்றார். இவர் 23 வாக்குகளை பெற்றதுடன் இவருக்கு எதிராக போட்டியிட்ட குமார சியம்பலாபிட்டிய 10 வாக்குகளை பெற்றார். அதேநேரம், உப பொருளாலர்களாக சந்தன லியனகே மற்றும் ஷிராந்த பீரிஸ் ஆகியோர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.
இதேவேளை தேசிய ஒலிம்பிக் குழு உறுப்பினர்களாக ருவான் அலஹகோன் (23 வாக்குகள்), சரத் ஹேவவிதாரண (22 வாக்குகள்) மற்றும் நெயில் பெரேரா (22) வாக்குகள்) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<